5 போட்டிகள்.. மெக்ராத், வால்ஷ், ஸ்டுவர்ட் ப்ராடை முந்தி அஸ்வின் படைக்க உள்ள வரலாற்று சாதனைகள்

Ashwin Broad
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்சமயத்தில் டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார். கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் பங்காற்றினார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011 முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 100 போட்டிகளில் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரர் என்ற சாதனையை சமீபத்தில் அஸ்வின் படைத்திருந்தார். அத்துடன் அனில் கும்ப்ளேவுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராகவும் அஸ்வின் வரலாறு படைத்துள்ளார். இந்த நிலையில் இந்தியா அடுத்ததாக வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

5 போட்டிகள்:

அதில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகளிலும் அணியின் காம்பினேஷன் காரணமாக அஸ்வினுக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்வியாகும். இருப்பினும் சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேசம் (2) மற்றும் நியூசிலாந்துக்கு (3) எதிரான தொடர்களில் அஸ்வின் கண்டிப்பாக 5 போட்டிகளிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த 5 போட்டிகளில் இன்னும் 4 விக்கெட்டுகளை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 8வது வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷை முந்தி அஸ்வின் சாதனை படைப்பார். அதே போல 15 விக்கெட்டுகளை எடுத்தால் ஆஸ்திரேலியாவின் நேதன் லயனை முந்தி ஆல் டைம் பட்டியலில் அஸ்வின் 7வது இடத்திற்கு முன்னேறுவார்.

- Advertisement -

சொந்த மண்ணில் அஸ்வின்:

இந்த 2 சாதனைகளையும் அஸ்வின் படைப்பதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. ஒருவேளை 5 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை எடுத்தால் ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத்தை முந்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த 6வது வீரராக அஸ்வின் சாதனை படைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அதற்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: கடைசி நிமிடத்தில் துலீப் கோப்பையில் களமிறங்கிய இஷான் கிசான்.. ரசிகர்களுக்கு அடி பணிந்த பிசிசிஐ?

அதே போல இந்திய மண்ணில் அஸ்வின் இதுவரை 363* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எனவே வங்கதேசம், நியூசிலாந்து தொடர்களில் இன்னும் 25 விக்கெட்டுகளை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற ஸ்டுவர்ட் ப்ராட் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய உலக சாதனை படைப்பார். இதற்கு முன் ஸ்டுவர்ட் பிராட் இங்கிலாந்து மண்ணில் 398 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement