பொறாமையில் பேசாதீங்க.. ஒலிம்பிக் ரைட்ஸ் வாங்குன அமெரிக்காவை கேளுங்க.. மைக்கேல் வாகனை விளாசிய கவாஸ்கர்

Sunil Gavaskar 4
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றது. முன்னதாக அந்த தொடரில் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் கயானா நகரில் தான் விளையாடும் என்று ஆரம்பத்திலேயே ஐசிசி அறிவித்தது.

ஏனெனில் ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற முதல் செமி ஃபைனல் இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு நடந்தது. ஒருவேளை அந்தப் போட்டியில் விளையாடினால் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். எனவே ஒளிபரப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்ற ஐசிசி இரவு 8 மணிக்கு கயானா நகரில் நடைபெற்ற செமி ஃபைனலில் இந்தியா விளையாடும் என்று அறிவித்தது.

- Advertisement -

கவாஸ்கர் பதிலடி:
ஆனால் அப்படி இந்தியாவுக்கு சாதகமாக செமி ஃபைனல் மைதானத்தை அறிவித்த ஐசிசி மற்ற அணிகளுக்கு அநியாயத்தை நிகழ்த்தியதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்தார். அத்துடன் ஒருவேளை ட்ரினிடாட் நகரில் செமி ஃபைனல் நடைபெற்றிருந்தால் இந்தியாவை தங்களுடைய இங்கிலாந்து தோற்கடித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு. “ஐசிசி டி20 உலகக் கோப்பையின் அட்டவணை பற்றி சில கருத்துக்கள் காணப்பட்டது. குறிப்பாக பழைய பவரை (இங்கிலாந்து) சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் தெரிவித்த கருத்துக்கள் சிரிப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது. வருமானத்தை கொடுக்கும் ஸ்பான்சர்ஷிப் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தான் ஐசிசிக்கு கிடைக்கிறது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் போல் தெரிகிறது”

- Advertisement -

“இந்திய தொலைக்காட்சி 3 பில்லியன் டாலர்கள் உரிமையை கொடுக்கிறது. எனவே விளையாட்டை பின் தொடரும் மில்லியன் கணக்கான மக்களை முதன்மை நேரத்தில் போட்டியை பார்க்க வைத்து அவர்கள் பணத்தை பெறுவதற்கு விரும்புவார்கள். பழைய பவர் (இங்கிலாந்து) மக்கள் தொகையை விட எங்கள் மக்கள் தொகை இரு மடங்கு அதிகம் என்பதை தகவலுக்காக தெரிவிக்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: இந்திய அணியில் விராட், ரோஹித் இடத்தை அந்த 2 இளம் வீரர்கள் நிரப்புவாங்க.. மசகட்சா நம்பிக்கை

“ஒலிம்பிக் தொடருக்கான உரிமையை அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. அதனால் அவர்களுக்கான நேரத்தில் அனைத்து முக்கிய போட்டிகளும் உள்ளன. எனவே இது அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று ஏன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களால் கேட்க முடியவில்லை? ஆனால் இந்திய துணை கண்டத்தை பற்றி இரட்டை தர நிலைகளாக பேசுகின்றனர். எனவே அவர்களிடம் பொறாமை மற்றும் விரக்தியை தவிர வேறு எதுவுமில்லை” என்று கூறினார்.

Advertisement