இந்திய அணியில் விராட், ரோஹித் இடத்தை அந்த 2 இளம் வீரர்கள் நிரப்புவாங்க.. மசகட்சா நம்பிக்கை

Masakadza
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றியுடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

ஏனெனில் கடந்த 10 வருடங்களாக இந்தியாவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர்கள் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்து உலக சாதனை படைத்துள்ளனர். இருப்பினும் 35 வயதை தாண்டி விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்ட அவர்கள் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

மசகட்சா நம்பிக்கை:
இதைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அவர்களுடைய இடத்தை நிரப்பப் போவது யார் என்று எதிர்பார்த்து காணப்படுகிறது. அதற்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் முதல் சமீபத்திய ஜிம்பாப்வே போட்டியில் சதமடித்த அபிஷேக் சர்மா வரை சில இளம் வீரர்கள் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்புவது கடினம் என்று முன்னாள் ஜிம்பாப்வே நட்சத்திர வீரர் ஹமில்டன் மசகட்சா கூறியுள்ளார் .

அதே சமயம் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அவர்களுடைய இடத்தை நிரப்பக் கூடியவர்களாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்ருமாறு. “அது மிகப்பெரிய காலியிடம். அவர்களைப் போன்ற வீரர்களை நிரப்புவது கடினம். இருப்பினும் இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்கு இந்தியா சிரமப்படாது என்று நான் சொல்வேன்”

- Advertisement -

“அந்த இடங்களுக்கு தகுந்த சரியான வீரர்களை நீங்கள் கண்டறிய வேண்டும். நான் சுப்மன் கில் போன்ற வீரரின் முன்னேற்றத்தை பார்க்க காத்திருக்கிறேன். சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவருடைய ஆட்டத்தை கொஞ்சம் பார்த்துள்ளேன். நான் பார்த்த வரை அவருடைய ஆட்டத்தை விரும்புகிறேன். எனவே ஓய்வு பெற்ற வீரர்களின் ஒரு இடத்தை நிரப்பக்கூடிய வீரராக அவர் இருப்பார்”

இதையும் படிங்க: தப்புக்கு மன்னிப்பு கேட்டேன்.. லாராவும் பாபர் அசாமும் ஒன்னா? ஹர்பஜனும் ஒத்துகிட்டாரு.. கம்ரான் அக்மல் பேட்டி

“அதே போல் ஜெய்ஸ்வால். தன்னுடைய கேரியரை அவர் புத்திசாலித்தனமாக துவங்கியுள்ளார். எனவே இந்திய அணியிலிருந்து வெளியேறிய உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கு இந்த 2 வீரர்களால் முடியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு நன்றாக விளையாடி நிலையான இடத்தை பிடிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement