- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5இல் 2.. 700 ரன்ஸ்.. இந்த ஸ்பெஷல் பையனுக்கு சதத்தை விட இதான் பிடிக்கும்.. ஜெய்ஸ்வாலை பாராட்டிய கவாஸ்கர்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. பெர்த் மைதானத்தில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு சுருட்டி இந்தியா அட்டகாசம் செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 172-0 ரன்கள் குவித்து அசத்தி வருகிறது.

- Advertisement -

அசத்தும் ஜெய்ஸ்வால்:

களத்தில் ஜெய்ஸ்வால் 90*, கேஎல் ராகுல் 62* ரன்களுடன் உள்ள நிலையில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இத்தொடரில் முதல் முறையாக விளையாடும் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானாலும் 2வது இன்னிங்ஸில் 90* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார். இந்நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு சதத்தை விட இரட்டை சதங்கள் அடிப்பதே பிடிக்கும் என்று கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

அவருடைய திறமை பற்றி ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசியது பின்வருமாறு. “இந்தப் பையன் ஸ்பெஷல். அவர் பேட்டிங் செய்யும் விதம் அழுத்தங்களை கையாளும் விதம் சிறப்பாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 5 போட்டிகளில் 700 ரன்கள் அடித்த அவர் 2 இரட்டை சதங்கள் அடித்தார். எங்களைப் போன்ற பேட்ஸ்மேன்கள் சதங்கள் அடிக்க விரும்புகிறோம் என்று சொல்வோம்”

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:

“ஆனால் இந்தப் பையன் என்னை 150 அல்லது 200 ரன்கள் அடிக்க விடுங்கள் என்று சொல்கிறார். அவர் ரன்கள் குவிப்பதற்கான பசியுடன் இருக்கிறார். அது தான் இந்திய கிரிக்கெட்டுக்கும் தேவை. இடது கை பேட்ஸ்மேனான அவர் முற்றிலும் மாறுபட்ட அர்த்தத்தை கொண்டு வந்து எதிரணி பவுலர்களுக்கு பிரச்சனையை உருவாக்கலாம்”

இதையும் படிங்க: வேகம் பத்தல.. ஸ்டார்க்கிற்கு நேருக்கு நேராக பதிலடி.. லபுஸ்ஷேனுக்கு ரன் அவுட் ஆட்டம் காட்டிய ஜெய்ஸ்வால்

“அவர் தன்னுடைய ஷாட்டுகளை அடிக்க விரும்புகிறார். அவர் பார்ப்பதற்கு அற்புதமாக விளையாடும் பேட்ஸ்மேனாக தெரியாமல் இருக்கலாம். ஜெயஸ்வால் கிரிக்கெட் உலகத்தை தம்முடைய காலடியில் வைத்துள்ளார்” என்று கூறினார். அந்த வகையில் இப்போட்டியில் சதத்தை தாண்டி ஜெய்ஸ்வால் பெரிய ரன்கள் குவிப்பார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -