ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை அதிகரித்து வருகிறது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரிஷப் பண்ட் 37, நிதிஸ் ரெட்டி 41 ரன்கள் எடுத்த உதவியுடன் 150 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் விளையாடி ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு அபாரமாக பந்து வீசிய இந்தியா ஆல் அவுட்டாக்கி 46 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 172-0 ரன்கள் குவித்துள்ளது.
ஜெய்ஸ்வால் பதிலடி:
களத்தில் ஜெய்ஸ்வால் 90*, ராகுல் 62* ரன்களுடன் உள்ளனர். தற்போதைய நிலையில் இந்தியா 218 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஜெய்ஸ்வால் 2வது இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலை கொடுத்தார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க் பேட்டிங் செய்த போது அறிமுக இந்திய வீரர் ஹர்ஷித் ராணாவை எதிர்கொண்டார்.
அப்போது கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய நட்பில் “உங்களை விட நான் அதிகமான வேகத்தில் பந்து வீசுவேன்” என்று அவரிடம் ஸ்டார்க் சிரித்துக் கொண்டே சொன்னார். அந்த சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டார்க் வீசிய ஒரு பந்தில் ஜெயஸ்வால் அதிரடியான பவுண்டரியை அடித்தார். அதை அடித்த பின் “உங்களுடைய பந்து மிகவும் மெதுவாக வருகிறது” என்று விரக்தியில் சிரித்த ஸ்டார்க்கிடம் இந்திய வீரர் ராணாவை வம்பிழுத்ததற்காக ஜெய்ஸ்வால் சொல்லி பதிலடி கொடுத்தார்.
ஆட்டம் காட்டிய ஜெய்ஸ்வால்:
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சீனியர் பவுலரான அவருக்கு ஜெயஸ்வால் நேருக்கு நேராக பதில் கொடுத்தது இந்திய ரசிகர்களை பெருமையடைய வைத்தது. இது போக மார்ஷ் வீசிய 44வது ஓவரின் 5வது பந்தில் ஜெய்ஸ்வால் சிங்கிள் எடுக்க முயற்சித்தார். ஆனால் அந்தப் பந்தை எடுத்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் அவரை ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.
இதையும் படிங்க: ஃபார்முக்கு வந்து சேவாக் சாதனையை சமன் செய்த ராகுல்.. ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 20 வருட சாதனை
அதைப் பார்த்த ஜெயஸ்வால் வெள்ளைக்கோட்டுக்கு அருகே சென்ற முடிந்தால் அவுட் செய்யுங்கள் என்ற வகையில் நின்று கொண்டார். அதை பார்த்த லபுஸ்ஷேன் ரன் அவுட் செய்து விடுவேன் என்ற வகையில் பந்தை கைக்குள்ளேயே வைத்துக் கொண்டு எறிந்து காண்பித்தார். அதற்கு நான் காலை உள்ள வைத்து விடுவேன் என்று ஜெயஸ்வால் விளையாட்டு காட்டினார். அதே போல அவருக்கு 2 முறை ஆட்டம் காட்டிய ஜெய்ஸ்வால் இறுதியில் வெள்ளைக்கோட்டுக்குள் சென்றார்.



