- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாண்டிங்கின் அரிதான பாராட்டை வாங்கிய கிங் கோலி.. அதுல சச்சினை விட சிறந்த வீரர் தான்.. கவாஸ்கர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு பயத்தைக் காட்டும் வகையில் விளையாடி 332 ரன்களை குவித்து போராடி தோல்வியைச் சந்தித்தது.

இந்திய அணிக்கு பேட்டிங் துறையில் அதிகபட்சமாக விராட் கோலி 135, ரோஹித் சர்மா 57, கேஎல் ராகுல் 60, ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் குவித்து பங்காற்றினார்கள். பந்து வீச்சுத் துறையில் குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3 அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்து அசத்தினார்கள். இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

பாராட்டிய பாண்டிங்:

அந்த வெற்றிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் தம்முடைய 52வது சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். வரலாற்றில் ஒருநாள் கிரிக்கெட்டில் யாருமே 50 சதங்கள் அடித்ததில்லை. அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 49 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் அவரை கடந்த 2023 உலகக் கோப்பையிலேயே முந்திய விராட் கோலி தற்போது 52 சதங்கள் அடித்து தன்னை ஒருநாள் கிரிக்கெட்டின் கிங் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

அதனாலேயே ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் தாம் பார்த்ததிலேயே விராட் கோலி மகத்தான பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் ரிக்கி பாண்டிங் போன்ற ஆஸ்திரேலிய ஜாம்பவானின் பாராட்டை வாங்கிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட சிறந்தவர் என்பதில் ஐயமில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:

“நீங்கள் 52 சதங்கள் அடித்துள்ளீர்கள். அது உண்மையில் உங்களை மண்டலத்தின் மேலடுக்கிற்கு எடுத்துச் செல்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் தாம் பார்த்ததிலேயே விராட் கோலி சிறந்தவர் என்று ரிக்கி பாண்டிங் சொன்னதை நான் சமீபத்தில் கேட்டேன். பொதுவாக ஆஸ்திரேலியர்களிடம் இருந்து நீங்கள் அப்படிப்பட்ட பாராட்டை பெறுவது மிகவும் அரிதானதாகும்”

இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை நெருங்கும் விராட் கோலி – விவரம் இதோ

“பாண்டிங் போன்ற ஆஸ்திரேலிய கேப்டன் அப்படிச் சொல்வது மிகவும் கடினம். ஆனால் அப்பேர்ப்பட்ட ஆஸ்திரேலியர் பாராட்டும் அளவுக்கு விராட் கோலி சிறந்தவராக இருக்கிறார். அதனால் இனிமேலும் அதில் விவாதிப்பதற்கு எதுவுமில்லை. சச்சின் 51 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் கிரேட் சச்சின் டெண்டுல்கரை முந்தி முதலிடம் பிடிக்கும் போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -