உங்க அடிமையாவே நாங்க இருக்கணுமா? – ஆஸி, இங்கி வாரியங்களுக்கு கவாஸ்கர் கேள்வி, நடந்தது என்ன?

Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் 1 டி20 தொடராக உருவெடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் த்ரில்லராக அமைவதுடன் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்துக் கொடுக்கிறது. அதனால் தரத்தில் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளையும் மிஞ்சியுள்ள ஐபிஎல் தொடரால் சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட பிசிசிஐ பணக்கார வாரியமாக உருவெடுத்துள்ளது.

IPL 2022

- Advertisement -

இதனால் 2024 முதல் 94 போட்டிகளுடன் ஐபிஎல் தொடரை மேலும் விரிவுபடுத்த ஐசிசி கால அட்டவணையில் மாற்றங்களை செய்வதற்கான வேலைகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதனால் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடரால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆபத்து என்று இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் வல்லுநர்களும் கருதுகின்றனர். இதுபோக ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்துள்ள உரிமையாளர்கள் வெஸ்ட் இண்டீஸ், அமீரகம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் தங்களது கிளை அணிகளை வாங்கியுள்ளன.

இந்தியா மீது குற்றசாட்டு:
குறிப்பாக துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள டி20 தொடர்கள் வரும் 2023 ஜனவரியில் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளன. அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 தொடர் கடந்த பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் துபாயில் நடைபெறும் தொடரில் 3 அணிகளையும் தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் தொடரில் அனைத்து 6 அணிகளையும் இந்திய ஐபிஎல் அணி உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

CSK Johannasburg CSA T20

இங்கு பிரச்சனை என்னவெனில் துபாய் மற்றும் தென்ஆப்பிரிக்க தொடர் ஜனவரியில் நடைபெறுவதால் அதில் விளையாடுவதற்கு தங்களது நாட்டில் நடைபெறும் டி20 தொடரை காட்டிலும் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால் அந்த தொடர்களில் அணிகளை வாங்கியுள்ள ஐபிஎல் நிர்வாகங்களும் ஐபிஎல் தொடருமே இதற்கு காரணம் என்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வாரியங்கள் இந்திய நிர்வாகங்கள் மீது குற்றம் சாட்டுகின்றன.

- Advertisement -

கவாஸ்கர் காட்டம்:
ஆனால் பிக்பேஷ், ஹண்ட்ரட் ஆகிய தொடர்களை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வாரியம் நடத்தும் போது இந்தியா எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் ஐபிஎல் தொடருக்கு மட்டும் இந்த வாரியங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் காட்டத்துடன் பேசியது.

INDvsAUS

“நீங்கள் உங்களது கிரிக்கெட்டை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு எங்களது கிரிக்கெட்டில் தலையிட்டு என்ன செய்ய வேண்டும் என்று கூற வேண்டாம். எங்களுக்கு எங்களது கிரிக்கெட்டை வளர்க்க நீங்கள் சொல்வதை விட என்ன சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தெரியும். சர்வதேச கிரிக்கெட் அணிகளின் போட்டிகளை ஐபிஎல் தொந்தரவு செய்வதாக வரும் செய்திகளை படிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. குறிப்பாக துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் உருவானதும் அதற்கு காரணம் ஐபிஎல் தான் என்று “பழைய சர்வாதிகாரிகள் (ஆஸ்திரேலியா&இங்கிலாந்து)” புலம்பத் தொடங்கி விட்டனர்”

- Advertisement -

இங்கிலாந்து வாரியம் தங்களது அணி சர்வதேச போட்டிகளில் விளையாட போது “ஹண்ட்ரட்” எனும் தொடருக்காக புதிய அட்டவணையை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியர்களும் தங்களது வீரர்களை பிக்பேஷ் தொடரில் விளையாட வைக்கிறார்கள். ஆனால் அதேசமயம் துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 தொடர்கள் நடத்தப்படுவதால் தங்களது நாட்டு வீரர்கள் தங்களது டி20 தொடரை புறக்கணித்து விட்டு அதில் பங்கேற்று விடுவார்களோ என்று அவர்கள் கவலைப் படுகிறார்கள்” என்று கூறினார்.

Gavaskar

அடிமையா இருக்கணுமா:
மேலும் 1950 போன்ற காலகட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வாரியங்கள் மட்டுமே பணக்காரர்களாக இருந்ததாக தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் அந்த காலத்தில் பணத்துக்காக ரொம்பவும் கஷ்டப்பட்ட இந்தியா தற்போது ஐபிஎல் தொடரால் உலகை ஆட்சி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது அந்த பழைய சர்வாதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது போலவே இப்போதும் அடிமையாக இருக்க வேண்டுமா என்ற வகையில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த காலத்தில் பணத்தைப் பொறுத்தவரை இந்தியா ஒரு கவர்ச்சிகரமான அணியாக இல்லாத காலங்களை நினைத்து பாருங்கள். அந்த பழைய சக்திகளுக்கு (ஆஸ்திரேலியா & இங்கிலாந்து) மத்தியில் இந்தியாவின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் இடையே பல வருடங்கள் இடைவெளி இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக இந்தியா 1947/48இல் சென்றது. ஆனால் 2வது முறையாக எப்போது சென்றது தெரியுமா? அது 1967/68. ஆம் சார் அந்த 2 சுற்றுப் பயணங்களுக்கிடையே 20 ஆண்டுகள் இருந்தது. அடுத்தது 1977/78இல். இங்கிலாந்துக்கும் 1936, 1946 போன்ற நீண்ட இடைவெளிக்குப்பின் சென்றது. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரும் இதில் ஒரு பங்காற்றியிருக்கலாம். அதன்பின் 1952, 1959, 1967இல் இங்கிலாந்துக்கு இந்தியா சென்றது”

INDvsENG

“எம்சிசி தலைவரின் பெட்டிக்கு அழைக்கப்படுவது தங்களின் கிரிக்கெட்டை ஊக்குவிக்க உதவவில்லை என்பதை மற்ற கிரிக்கெட் வாரியங்கள் உணர்ந்த பின்பு தான் பல ஆண்டு இடைவெளிக்குப் பின் இறுதியாக எந்த தாழ்வு மனப்பான்மையும் இல்லாத புதிய நிர்வாகிகள் வந்தனர். அதன் பின்புதான் ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒரு முறை இந்திய சுற்றுப்பயணம் நிகழத் தொடங்கியது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பையில் விராட் கோலி விளையாடனும்னா அது அவர்கள் கையில் தான் உள்ளது – அருண் துமால் பேட்டி

இப்போது அதே பழைய சர்வாதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவதை விட இந்திய அணி விளையாடுவதால் அதிக லாபம் கிடைக்கிறது என்பதை புரிந்து கொண்டனர்” என்று கூறினார்.

Advertisement