டி20 உலககோப்பையில் விராட் கோலி விளையாடனும்னா அது அவர்கள் கையில் தான் உள்ளது – அருண் துமால் பேட்டி

Arun-Dhumal-and-Virat-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் மோசமான சறுக்களை சந்தித்துள்ளார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசிய அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதம் விளாசாமல் இருப்பது அவர் மீது இருந்த விமர்சனங்களை அதிகப்படுத்தியது. அதோடு மட்டுமின்றி நடைபெற்று முடிந்த பல தொடர்களாகவே அவர் சொற்ப ரன்களில் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வருவது அவரது இடத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Kohli

- Advertisement -

குறிப்பாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியில் விராட் கோலி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வியே எழுந்துள்ளது. அந்த வகையில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் தற்போது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரிலும் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் டி20 உலக கோப்பையில் விராட் கோலி இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் ஆசிய கோப்பைக்கான அணியும் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளதால் அந்த தொடரிலும் விராட் கோலி இடம் பெறுவாரா? என்பது சந்தேகமே. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடுவது குறித்து பிசிசியின் முக்கிய நிர்வாகியான அருண் துமால் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Kohli

விராட் கோலி ஒரு சாதாரண வீரர் கிடையாது, அவர் ஒரு கிரேட் பிளேயர். இந்திய அணிக்காக அவர் வழங்கியுள்ள பங்களிப்பு என்பது அளப்பரியது. நாங்களும் விராட் கோலி விரைவில் மீண்டும் இந்திய அணியில் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் தற்போதைக்கு அவரது இடம் குறித்து எதையும் உறுதியாக கூற முடியாது.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் விராட் கோலி விளையாடுவாரா? மாட்டாரா? என்பது முற்றிலும் தேர்வு குழுவினர் கையில்தான் உள்ளது. அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதைத்தான் நாங்கள் ஏற்க முடியும் என்று தெளிவாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக விராட் கோலி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது முற்றிலும் தேர்வுக்குழு நிர்வாகிகள் கையில் தான் உள்ளது என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க : இனிமேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரரான இவருக்கு வாய்ப்பு கிடையாது – பி.சி.சி.ஐ முடிவு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள விராட் கோலி மீண்டும் ஆசிய கோப்பை-க்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அவருக்கு எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் இடம் கிடைக்கும் என்பதே அனைவரது ஒருமித்த கருத்தாகவும் உள்ளது.

Advertisement