இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை அடைந்ததை அடுத்து இந்திய அணியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா களத்தில் எடுக்கும் முடிவுகள், அவருடைய தனிப்பட்ட செயல்பாடுகள் மற்றும் அவருடைய நடவடிக்கைகள் என பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அதன்படி சென்னை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை குவித்தது. பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நல்ல நிலையில் இருந்தும் இறுதியில் 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்ததால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் ஏமாற்றமான தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து கடுமையான சில கருத்துக்களை முன்வைத்தார். அதன்படி அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ஒரு கேப்டனாக ரோகித் சர்மா அனைத்து போட்டியிலுமே விளையாட வேண்டும். எந்த ஒரு போட்டிக்குமே அவர் விடுப்பு எடுக்கக் கூடாது. தனிப்பட்ட காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது அணியின் நலனை பாதிக்கும்.
குடும்ப விழா எனக் கூறி முதல் ஒருநாள் போட்டியில் விடுப்பு எடுத்துக்கொண்டது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் உலகக்கோப்பை அருகில் வைத்துக் கொண்டு இதேபோன்று முக்கியமான போட்டிகளை அவர் தவறவிட்டால் அது அணிக்கும் பிரச்சனையை தரும். ஏனெனில் ஒரு அணியில் உள்ள வீரர்கள் ஒரே கேப்டனுக்கு கீழ் செயல்பட்டால் தான் சரியான மனநிலையுடன் வீரர்கள் விளையாடுவார்கள்.
இதையும் படிங்க : உலககோப்பையில் மட்டும் அவர் விளையாடலனா இந்திய அணிக்கு அது மிகப்பெரிய இழப்புதான் – ஆரோன் பின்ச் வெளிப்படை
அடிக்கடி கேப்டன் மாற்றம் நடந்தால் அணியில் சரியான சூழல் நிலவாது எனவே ரோகித் சர்மா தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று விளையாட வேண்டும். இனியாவது சாக்குபோக்குகளை கூறி போட்டிகளை தவறவிட வேண்டாம் என அவருக்கு கவாஸ்கர் அட்வைஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



