தோனியின் கீழ் விளையாடியது போது தான் என் ஆட்டம் மெருகேறியது – இளம்வீரர் புகழாரம்

Pune
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்களே அதிக அளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் பவர்பிளே ஓவர்களில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் வாஷிங்டன் சுந்தர் தனது சிறப்பான பவுலிங்கின் மூலம் ரன்களை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி விக்கட்டுகளையும் குறித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Sundar-2

- Advertisement -

இந்நிலையில் தற்போது தனது இந்த சிறப்பான குறித்து பேட்டி அளித்துள்ள வாஷிங்டன் சுந்தர் பல சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : 2017 ஆம் ஆண்டு புனே அணிக்காக தோனியின் தலைமையின் கீழ் நான் விளையாடினேன். அப்போது கிரிக்கெட் குறித்து நிறைய விடயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அது என்னை நானே ஒரு முழுமையான வீரராக மாற்றிக் கொள்ள உதவியது.

அன்று முதல் இன்று வரை பந்துவீச்சில் நான் பல விடயங்களை கற்று வருகிறேன். ஒவ்வொரு பந்து வீசும் போதும் லேட்டாக வீசுவது, பேட்ஸ்மேன்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்றார் போல் வீசுவது என எல்லாவற்றையும் கவனித்து சிறப்பாக பந்துவீசி வருகிறேன். அது என்னுடைய பிளஸ் என்றும் கூறலாம். மேலும் என்னுடைய உயரமும் என்னுடைய பந்துவீச்சுக்கு உதவுகிறது. என் மீது கோலி வைத்துள்ள நம்பிக்கையை கொண்டு தற்போது நான் பந்துவீசி வருகிறேன்.

Sundar 1

ஏனெனில் ஒவ்வொரு முறை அவர் பவர்பிளே ஓவர்களில் எனக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கும் போது என்னை நம்பி முக்கிய கட்டங்களிலும் பந்தினை கொடுக்கிறார். இதுபோன்று பவுலர் மீது கேப்டன் நம்பிக்கை வைக்க அதிக தைரியம் வேண்டும். அந்த வகையில் கோலி என்மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். நான் சிறப்பாக பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறேன்.

Sundar 2

பேட்டிங் செய்தாலும் போட்டியை வென்று கொடுக்கவே நான் விரும்புகிறேன். அதனால் நான் இப்போது பேட்டிங்கிலும் கொஞ்சம் பயிற்சி அதிகமாக மேற்கொண்டு வருகிறேன். இந்திய அணிக்காக டி20 மட்டுமின்றி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட எனக்கு ஆசை அதனால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் பயிற்சி எடுத்து வருவதாக சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement