இவர் பெங்களூரு அணியில் இருப்பதால் அது எனக்கு கூடுதல் பலம் அளிக்கிறது – தமிழக வீரர் சுந்தர் பேட்டி

sundar
- Advertisement -

ஐபிஎல் தொடர் கடந்த 19ம் தேதி துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வித்தியாசமான முடிவுகள்தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் நன்றாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை போன்ற அணிகள் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துக் கொண்டிருக்கிறது.

ABD

- Advertisement -

குறிப்பாக இந்த வருடத்தில் பெங்களூரு அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது வழக்கம்போல் இந்த வருடமும் அந்த அணியின் ஏபி டிவில்லியர்ஸ் அற்புதமாக விளையாடி வருகிறார்.

இந்த வருட சீசன் துவங்குவதற்கு முன்னர் பெங்களூர் அணிக்கு ஏபி டிவிலியர்ஸ் விக்கெட் கீப்பராக இருக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் கசிந்தது. மேலும் பயிற்சியிலும் அவர் விக்கெட் கீப்பராக பயிற்சி அளிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏலம் எடுக்கப்பட்ட புதுமுக வீரர் ஜோ பிலிப் என்ற ஒரு வீரர் விக்கெட் கீப்பராக இருந்தார்.

ABD

மேலும் அவர் விக்கெட் கீப்பராக இருக்கும் போது அவரிடம் மிகச் சிறந்த பேட்டிங் செயல்பாட்டையும் பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக உடனடியாக அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் ஏபி டிவிலியர்ஸ் கீப்பராக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த நிலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

sundar 1

இந்நிலையில் இது குறித்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேசியிருக்கிறார் அவர் கூறுகையில்… ஏபி டிவிலியர்ஸ் மிகச்சிறப்பான வீரர் அவர் அணியில் இருந்தாலே உங்களுக்கு கூடுதல் பலம். ஒரு பேட்ஸ்மேன் என்பதைவிட அவர் விக்கெட் கீப்பராக இருப்பது எங்களுக்கு நிறைய சவுகரியத்தை கொடுக்கிறது. ஒரு அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பருக்கு பின்னால் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய உந்துதலை தான் கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார் வாசிங்டன் சுந்தர்.

Advertisement