இந்த ஒருவீரர் போதும். சென்னை அணியை பவர்பிளே ஓவர்களிலேயே தடுமாற வைக்க – கோலி பிளான்

Umesh
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே இன்று ஐபிஎல் தொடரில் 25 வது லீக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் 25 போட்டியில் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 முறையும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

Kohli

- Advertisement -

பெங்களூர் அணி மிகச் சிறப்பாக ஐபிஎல் தொடரில் செயல்பட்டு வருவது மட்டுமல்லாமல் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் வரும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

இன்று நடைபெறப்போகும் போட்டியில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் பெங்களூர் அணிக்காக களம் இறங்கப் போகிறார். ஆல்ரவுண்டரான சுந்தர் தொடர்ந்து தனது அசாத்தியமான சுழற்பந்து வீச்சால் அசத்தி வருகிறார். இவரை விராட் கோலி ஒரு சுழற்பந்து வீச்சாளராக பவர் பிளே ஓவர்களில் பயன்படுத்தி வருகிறார்.

sundar 1

அதிலும் குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் பந்து வீசும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக பயன்படுத்தப்படும் போது விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார். இப்படித்தான் கொல்கத்தா அணிக்கு எதிராக பவர் பிளே ஓவரில் அற்புதமாக பந்து வீசியதன் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று வருகின்றார்.

sundar

இன்று நடைபெறப்போகும் போட்டிகளும் சென்னை அணிக்கு எதிராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை அஸ்திரமாக விராட் கோலியை பயன்படுத்துவார் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் தோனி, ஜாதவ், ஜடேஜா என சுழற்பந்து வீச்சில் சற்று திணறி வருகின்றனர். இதன் காரணமாக இன்று வாசிங்டன் சுந்தர் தான் சென்னையை காலி செய்வார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement