ஐ.பி.எல் தொடரில் அசத்தும் தமிழக வீரர்கள். 2 நாட்கள் 2 சிறந்த பர்பார்மென்ஸ் – ஒரு முழு அலசல் இதோ

- Advertisement -

நடப்பு 13 ஆவது ஐபிஎல் தொடர் பல்வேறு சிக்கல்களை கடந்து தற்போது வெற்றிகரமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆரம்பத்திலிருந்து சுவாரஸ்யமாகவே சென்றுகொண்டிருக்கிறது. மேலும் எந்த அணி பலம் வாய்ந்த அணி என்று நினைக்கிறோமோ ? அந்த அணி தோல்வி அடைகிறது. எந்த அணி சாதிக்காது என்று நினைக்கிறோமோ ? அந்த அணி வெற்றி பெறுகிறது. மேலும் இரண்டாவது பேட்டிங் செய்தால்தான் வெற்றி பெறும் என்ற நிலையிலிருந்து தற்போது போட்டி எந்த நேரத்தில் எப்படி முடியும் என்றே தெரியாத அளவுக்கு சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

ipl 1

இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் பல அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில வீரர்கள் தங்களது திறமையின் மூலம் அசத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூரு மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 ஓவர்களில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியது.

- Advertisement -

அதுமட்டுமின்றி போட்டியின் முக்கிய விக்கெட்டான மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவையும் வீழ்த்தினார். அந்த போட்டியில் மட்டும் இருஅணிகளும் சேர்த்து 402 ரன்களைக் குவித்தனர். முற்றிலும் பேட்டிங்குக்கு ஒத்துழைத்த அந்த ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீசி 12 ரன்களை மட்டுமே கொடுத்த சுந்தரை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் வாழ்ந்திருந்தார்.

sundar 1

இந்நிலையில் தற்போது நேற்று நடைபெற்று முடிந்த சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரரான நட்ராஜ் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 163 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வந்த டெல்லி அணிக்கு எதிராக சரியான நேரத்தில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் தொடர்ந்து யார்க்கர் பந்துகளை வீசி அசத்தினார். கேப்டன் வார்னரும் மீது நம்பிக்கை வைத்து டெத் ஓவர்களை பந்துவீச அனுமதித்தார்.
மேலும் முக்கிய வீரரான ஸ்டோனிஸ்ஸை அவர் வீழ்த்தினார்.

natarajan

இவரது யார்க்கர் பந்துகள் அனைவரையும் கவர்ந்தன. மொத்தம் நான்கு அவர்கள் வீசிய இவர் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 முக்கிய விக்கெட்டையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎல் சாதித்த வீரர்களை ஐபிஎல் மூலம் ஏலம் எடுத்து தற்போது அனைத்து அணிகளும் பயன்படுத்தி வர இந்த தொடரிலும் தமிழக வீரர்கள் பிரகாசிப்பது இந்திய அணிக்கு பல வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து செல்ல வாய்ப்பாக அமையும் என்றும் பல கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement