183 ஸ்ட்ரைக் ரேட்டில் 3.. தகுதியற்ற கில்லுக்காக சாம்சனை பெஞ்சில் பார்ப்பது வலிக்குது.. பத்ரிநாத் விமர்சனம்

Subramaniam badrinath
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வென்ற போதிலும் 2வது போட்டியில் தோற்றது. அந்தப் போட்டியில் 214 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு துணைக் கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானது முக்கிய காரணமானது. ஐபிஎல் தொடரில் குஜராத்துக்காக 2022, 2023 சீசனில் அசத்திய விளையாடிய அவர் இந்திய டி20 அணிக்காகவும் அறிமுகமானார்.

அந்த வாய்ப்பில் ஓப்பனிங்கில் தடுமாற்றமாக விளையாடிய அவரை கழற்றி விட்ட இந்திய அணி புதிய ஜோடியை தேர்ந்தெடுத்தது. அப்போது நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் தடுமாறி வந்த சஞ்சு சாம்சன் அபிஷேக் ஷர்மாவுடன் சேர்ந்து அசத்தலாக விளையாடினார். குறிப்பாக 3 சதங்கள் அடித்து அபாரமாக விளையாடிய அவர் ஒரு வழியாக இந்திய அணியில் தமக்கான இடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

சாம்சனை பாத்தா வலிக்குது:

ஆனால் திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கும் தேர்வுக்குழு மீண்டும் டி20 அணிக்கு துணைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. அதனால் சாம்சனை கழற்றி விட்ட கம்பீர் அவருக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் இதுவரை சுப்மன் கில் சுமாராக விளையாடி வருகிறார். மறுபுறம் 2025 ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் ஓரளவு நன்றாக விளையாடிய சாம்சன் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

இருப்பினும் இத்தொடரில் அவரை கழற்றி விட்ட கம்பீர் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மாவை தேர்ந்தெடுத்துள்ளார். இந்நிலையில் துணைக் கேப்டனாக இல்லாமல் போனால் சுப்மன் கில் டி20 அணியில் விளையாடும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பத்ரிநாத் விமர்சனம்:

“சாம்சன் 3 சதங்களை டி20 கிரிக்கெட்டில் அடித்துள்ளார். இதற்கு மேல் ஒரு வீரரால் என்ன செய்ய முடியும்? நன்றாக விளையாடிய பின்பும் ஒரு வீரர் பெஞ்சில் அமர்ந்திருப்பதைப் பார்ப்பது வலியைக் கொடுக்கிறது. பொதுவாக கேப்டன் அல்லது துணைக் கேப்டனாக இருப்பவர் மட்டுமே பிளேயிங் லெவனில் உறுதியாக விளையாட வேண்டியவர். அதன் அடிப்படையில் கில் விளையாடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் இந்திய டி20 அணியில் திறமைக்கு பஞ்சமில்லை” என்று ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பேசினார்.

இதையும் படிங்க: விராட் கோலி மற்றும் விராட் கோலியின் சம்பள ஒப்பந்தம் எந்த கிரேடில் இருக்கும்? – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

அதே நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “சாம்சன் கொண்டுள்ள 183 ஸ்ட்ரைக் ரேட் என்பது வேற லெவல். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் நமது பயிற்சியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்கிறார்கள். தற்போது அவர்கள் சஞ்சு – ஜிதேஷ் ஆகியோருக்கிடையே போட்டி இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் தெளிவில்லை. கில் நல்ல வீரர் என்பதால் நிறை வாய்ப்பு கொடுப்பதாகவும் சொல்லும் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்” என்று கூறினார்.

Advertisement