எட்டி உதைச்சாரு.. கேப்டன் கூல் தோனி எவ்வளவு கோபமானவர் தெரியுமா? 2008 ஐபிஎல் பின்னணியை பகிர்ந்த பத்ரிநாத்

S Badrinath
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக கேப்டன் தோனி என்றாலே அழுத்தமான சூழ்நிலைகளிலும் பதற்றமடையாமல் பொறுமையாக செயல்படும் தன்மையுடையவர். அதனாலேயே அவரை கேப்டன் கூல் தோனி என்று பலரும் அழைப்பது வழக்கமாகும். ஆனால் தோனியும் மனிதர் என்பதால் அவ்வப்போது பொறுமையிழந்து கோபமடைவது வழக்கமாகும்.

- Advertisement -

கோபமான தோனி:

அது போன்ற தருணத்தை சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். கடந்த 2008 ஐபிஎல் தொடரில் அல்பி மோர்கெல் 4 விக்கெட்டுகள் எடுத்த உதவியுடன் பெங்களூருவை 126-8 ரன்களுக்கு சிஎஸ்கே கட்டுப்படுத்தியது. அதைத் துரத்திய சென்னைக்கு தற்போதைய பயிற்சியாளர் பிளமிங் 44 (39) ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

ஆனால் அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 20 ஓவரில் 111-8 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சேப்பாக்கத்தில் பரிதாபமாக தோற்றது. அப்போட்டியில் சுமாராக விளையாடி அவுட்டான தம்மை தோனி திட்டாமலேயே உடைமாற்றும் அறைக்குள் இருந்த தண்ணீர் பாட்டில் எட்டி உதைத்து கோபத்தை காட்டியதாக பத்ரிநாத் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

எட்டி உதைத்த தோனி:

“அனில் கும்ப்ளேவுக்கு எதிராக நான் லேப் ஷாட் அடித்து எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானேன். அதனால் நான் உடைமாற்றும் அறையில் நின்று கொண்டிருந்தேன். அங்கே ஒரு சிறிய தண்ணீர் பாட்டில் இருந்தது. அப்போது அங்கே வந்த தோனி அந்த பாட்டிலை வெளியே செல்லும் அளவுக்கு எட்டி உதைத்ததால் “ஓ மை காட்” என்ற வகையில் நான் நின்றேன்”

இதையும் படிங்க: லகான் ஹீரோ அமீர் மாதிரி.. கோட் ரோஹித் சர்மா எங்களுக்கு இதை செய்றாரு.. சர்பராஸ், ஜுரேல் பேட்டி

“யாரும் அதைப் பார்க்க விரும்ப மாட்டார்கள். அந்த சமயத்தில் எங்கள் வீரர்கள் யாரும் அவரைப் பார்க்கவில்லை. அனைவரும் அவரிடமிருந்து தள்ளி இருக்க முயற்சித்தோம். இருப்பினும் தோனி அதைப்பற்றி வார்த்தைகளில் எதையுமே சொல்லவில்லை. அது பற்றி அணி மீட்டிங்கும் நடத்தப்படவில்லை” என்று கூறினார். இதை தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement