பாவங்க ருதுராஜ்.. நடிகைகளுடன் கிசுகிசுவை பாக்குறாங்களே தவிர அந்த 7 மேட்ச்சை பாக்கல.. பத்ரிநாத் ஆதங்கம்

Subramaniam Badrinath
- Advertisement -

விரைவில் துவங்கும் இலங்கை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் ஜாம்பவான் தோனியின் நம்பிக்கையை பெற்று சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அவரது தலைமையில் ஏற்கனவே இந்தியா 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றது.

அத்துடன் சமீபத்திய ஜிம்பாப்வே தொடர் உட்பட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 633 ரன்களை 143.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 39.6 சராசரியில் கோவித்துள்ளார். ஆனால் அவரை இலங்கைத் தொடரில் கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு அதே ஜிம்பாப்பை தொடரில் கொஞ்சம் சுயநலமாக விளையாடிய சுப்மன் கில்லை துணை கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

வாய்ப்புக்கு தேவையானது:
இந்நிலையில் சிறப்பாக விளையாடியும் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்காதது தமக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை”

“சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்ஸில் அவர் 71.2 அபாரமான சராசரியில் 158.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்தார். அப்படி கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து ரன்கள் மேல் ரன்கள் அடித்துள்ளார். ஆனாலும் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் தெரியாததால் ருதுராஜ்க்கு நியாயம் வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது”

- Advertisement -

“மறுபுறம் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட், ரோஹித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது. ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் தத்தெடுத்து வளர்க்க நினைக்கின்றனர். அதே போல ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது”

இதையும் படிங்க: பயிற்சியாளராக கௌதம் இந்திய அணியில்.. இந்த 2 புதிய மாற்றத்தை கொண்டு வருவாரு.. டிகே பேட்டி

“அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பிஆர் ஏஜென்சியை வைத்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் நன்றாக விளையாடத் தெரிவதுடன் இந்தியாவுக்காக விளையாட இப்போதெல்லாம் இந்த 3 விஷயங்களை வைத்திருப்பது அவசியமாகிறது. அப்போது தான் உங்களால் பெரியாளாக வர முடியும் போல” என்று கூறினார்.

Advertisement