கிரிக்கெட் விளையாட்டை தவிர இதுபோன்ற மோசமான செயல் வேற எந்த விளையாட்டிலும் நடக்காது. அம்பயர்களை கடுமையாக விமர்சித்த – ஸ்டைரிஸ்

Styris

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அம்பயர்களின் தவறான முடிவுகளால் ஆட்டத்தில் முடிவே மாறி இருக்கிறது இதை நாம் இறுதிப்போட்டியில் முதற்கொண்டு பார்த்தோம். அம்பயர்களின் தவறான தீர்ப்புகளால் வீரர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Dharmasena

அதாவது டிஆர்எஸ் விதி மற்றும் எல்பிடபிள்யூ தொடங்கி அனைத்திற்கும் அம்பயர்கள் பல தவறான முடிவுகளை அடிக்கடி எடுக்கின்றனர். இந்நிலையில் நவீன தொழில்நுட்பம் மூலம் அது சரி செய்யப்படுகிறது. இருப்பினும் ஒரு சில நேரங்களில் அம்பயர்களின் பல முடிவுகள் போட்டியின் முடிவுகளை மாற்றுகின்றன. இதனால் அம்பயர்களின் தரம் குறைந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

- Advertisement -

உலககோப்பையில் அம்பயர்களின் மோசமான செயல்பாடு குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது :

Umpire

அம்பயர்கள் படுமோசமாக செயல்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியை தவிர வேற எந்த விளையாட்டிலும் இதுபோன்று உள்ளதா என்பது போல கேள்வி எழுப்பி உள்ளார். ஸ்டைரிஸ்ஸின் இந்த ட்விட்டை பலரும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டெய்லர் இந்த பதிவிற்கு லைக் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement