தோனியை பத்தி நான் பேசனது தப்புன்னு புரியவச்சிட்டாரு. சி.எஸ்.கே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட – ஸ்டைரிஸ்

- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. அதற்கு காரணமாக மூத்த வீரர்கள் அணியில் இருப்பதால்தான் தொடர் தோல்வி ஏற்படடது என்றும் அதனால் 14வது சீசனுக்கான சிஎஸ்கே அணியில் பல இளம் வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றும் வகையில் சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மொயின் அலியை மட்டும் ஏலத்தில் எடுத்து அணியில் மூன்றாவது வீரராக களம் இறக்கியது. அதைத்தவிர சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதனால் சிஎஸ்கே மீது இந்த தொடர் துவங்கும் முன்னர் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்கார்ட் ஸ்டரிஸ் தற்போது தான் கூறிய கருத்திற்கு சிஎஸ்கே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் சிஎஸ்கே அணியை தவறாக கணித்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள். கடந்த சீசனில் சிஎஸ்கே அணி படுமோசமாக சொதப்பியதால் இந்த ஆண்டும் சொதப்பும் என்றும் தெரிவித்து இருந்தேன்.

CSK

ஆனால் சிஎஸ்கே அணி தற்போது வரை அபாரமாக விளையாடி உள்ளது. தோனியின் கேப்டன்சியை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். ஒரே வருடத்தில் அணியை மாற்றியமைக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்ட தோனி மூன்றாவது இடத்தில் மொயின் அலியை களமிறக்கி அணியின் பேட்டிங் வரிசையை மாற்றி விட்டார். அதன்காரணமாக தற்போது சிஎஸ்கே அணி பலமான அணியாக மீண்டும் திரும்பி உள்ளது.

moeen ali 2

சிஎஸ்கே அணி குறித்த தவறான கணிப்புகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த 14 வது சீசனில் இதுவரை சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்ற புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement