சரியான முட்டாள்தனம் : கோபத்தில் பிசிசிஐ-யை வெளிப்படையாக திட்டிய ரவி சாஸ்திரி – என்ன நடந்தது

Shastri
- Advertisement -

வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களுக்கு திரில் விருந்து படைக்க காத்திருக்கிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இம்முறை 10 அணிகள் விளையாடுவதால் 74 கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இம்முறை இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

ipl

- Advertisement -

ரவி சாஸ்திரி ரிட்டன்ஸ்:
இந்த தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இதில் மிக சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக நடப்புச் சாம்பியன் சென்னை உள்ளிட்ட அனைத்து அணிகளும் மிகுந்த தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தேவையான இறுதிகட்ட வேலைகளில் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டு வருகிறது

இந்த தொடரை இந்தியாவில் ஒளிபரப்பு செய்யும் பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் ஐபிஎல் 2022 தொடரில் வர்ணனை செய்து ரசிகர்களை மகிழ்விக்க போகும் வர்ணனையாளர்களின் மொத்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த மிகவும் புகழ்பெற்ற இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரியின் பெயர் நீண்ட நாட்களுக்கு பின் இடம் பிடித்துள்ளது. ஓய்வுக்குப்பின் 90களில் வர்ணனையாளராக செயல்படத் துவங்கிய அவர் அதன்பின் தனது காந்தக் குரலால் போட்டியின் போக்கையும் நுணுக்கங்களையும் வர்ணனை செய்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

.shastri

தடுத்த பிசிசிஐ:
குறிப்பாக 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வென்றபோது அவர் வர்ணித்த வார்த்தைகளை இப்போது கேட்டாலும் கூட ரசிகர்களுக்கு புல்லரிக்கும் என்றே கூறலாம். அத்துடன் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சரை அடித்த போது சச்சின் டெண்டுல்கர் 200* ரன்களை தொட்ட போது அவர் செய்த வர்ணனைகள் காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாகும். அப்படி வர்ணனை செய்வதில் வல்லவராக திகழும் அவர் கடந்த 2017 – 2021 வரையிலான காலகட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததால் வர்ணனை செய்யமுடியவில்லை. தற்போது அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் மீண்டும் தமக்கு பிடித்த வர்ணணை செய்யும் பணிகளில் ஈடுபட துவங்கியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது ஐபிஎல் தொடரின் 15-வது சீசன். ஆரம்பத்திலிருந்து முதல் 11 சீசன்களில் தொடர்ச்சியாக நான் வர்ணனை செய்தேன். ஆனால் அதன்பின் ஒருசில முட்டாள்தனமான சட்ட விதிமுறைகளில் உள்ள முட்டாள்தனமான விதிகள் காரணமாக கடந்த சில சீசன்களாக வர்ணனை செய்ய முடியவில்லை” என பிசிசிஐயை விளாசினார்.

Shastri

அவர் கூறுவது போல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு முக்கியமான விதிமுறை உள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒரு பணியில் இருக்கும் ஒருவர் அதே நேரத்தில் வேறு ஒரு பணியில் ஈடுபட முடியாது என்ற விதிமுறை உள்ளது. இதை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நீதிபதி லோதா கமிட்டி அடங்கிய குழு பரிந்துரைத்தது. இருப்பினும் பிசிசிஐ தலைமைப் பொறுப்பில் எந்த பதவியும் வகிக்காத ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக மட்டுமே இருந்தார்.

- Advertisement -

ஆனால் அந்த விதிமுறைகளை மேற்கோள் காட்டிய பிசிசிஐ கடந்த 2018 முதல் அவரை வர்ணனை செய்ய விடாமல் இருந்து வந்தது. அதற்காக இதுபோல இடையிடையே விமர்சித்து வந்த ரவி சாஸ்திரியின் கையில் கடைசி வரை மைக்கை கொடுக்க விடாத பிசிசிஐ அவர் பயிற்சியாளர் பதவியில் விலகிய பின்புதான் வர்ணனை செய்ய அனுமதித்து உள்ளது.

வர்ணனையாளராக ரெய்னா:
அவரைப்போலவே நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவும் இந்த வருடம் முதல் முறையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாக வர்ணனையாளராக அறிமுகமாக உள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக காலம் காலமாக அதிரடியாக விளையாடி மிஸ்டர் ஐபிஎல் என பெயரெடுத்த அவர் கடந்த சில வருடங்களாக ரன்கள் அடிக்க முடியாமல் பார்மின்றி தவிப்பதால் இம்முறை யாரும் வாங்கவில்லை. எனவே நிதர்சனத்தை புரிந்து கொண்டுள்ள அவர் தற்போது வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

- Advertisement -

அது பற்றி ஒரு ஜாம்பவான் வர்ணனையாளராக கருதப்படும் ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “அவரை நீங்கள் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கிறார்கள். அதை நான் ஒப்புக் கொள்ளாமல் இருக்க மாட்டேன். ஏனெனில் அவர் ஐபிஎல் தொடரை ஒளிர செய்தவர். தொடர்ச்சியாக அனைத்து சீசன்களிலும் ஒரு அணிக்காக ஒரு போட்டியை கூட தவற விடாமல் விளையாடுவது உண்மையாகவே மிகப்பெரிய பாராட்டுக்குறியது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : 25% பார்வையாளர்களுக்கு அனுமதி. ஆனா டிக்கெட் எப்படி வாங்கனும் தெரியுமா? – விவரம் இதோ

இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் அவரும் ஒருவர்” என பாராட்டி பேசினார். இதையடுத்து ரவி சாஸ்திரி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவருமே விரைவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின்போது இந்தி மொழியில் வர்ணனை செய்ய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement