அந்த இந்திய வீரர் ரொம்ப ஆபத்தானவர்.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க – எச்சரித்த ஸ்டூவர்ட் பிராடு

Stuart Broad
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது இன்று மார்ச் 5-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு இவர்தான் அச்சுறுத்தலை தருவார் : ஸ்டூவர்ட் பிராடு

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த போட்டிக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தாக இருக்கப்போகும் இந்திய வீரர்? குறித்து முன்னாள் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இங்கிலாந்து பந்துவீச்சாளராக இருந்தால் 12 ஓவர்களுக்கு பிறகு ஹார்டிக் பாண்டியாவை களமிறங்க விருப்பப்படுவேன். ஏனெனில் அவர் இறுதி கட்ட ஓவர்களில் வந்தால் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுவார். அதனால் 12 வது ஓவருக்கு பிறகு அவர் வரும் பட்சத்தில் விரைவாக ஆட்டமிழக்க வைத்து இந்திய அணியின் ரன் குவிப்பை தடுக்கலாம்.

ஹார்டிக் பாண்டியவை பொறுத்த வரை மிகவும் ஆபத்தான வீரர். முதல் பத்து ஓவர்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடிவிட்டால் இங்கிலாந்து அணிக்கு ஹார்டிக் பாண்டியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். மேலும் இந்திய அணி அதிரடியான துவக்கத்தை பெறும்போது அவர் நல்ல நம்பிக்கையுடன் களமிறங்குவார்.

- Advertisement -

இதையும் படிங்க : வரலாற்று சாதனையுடன் நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்ற – பின் ஆலன்

எப்போதுமே ஹார்டிக் பாண்டியாவை மெலிந்த உடலுடன் இருக்கும் வீரர் என்று பலரும் பார்க்கின்றனர். ஆனால் அவர் எளிதாக 100 மீட்டருக்கு பந்தை அடிக்கிறார். எனவே ஹார்டிக் பாண்டியா விடயத்தில் இங்கிலாந்து வீரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஸ்டூவர்ட் பிராடு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement