இந்த தலைமுறையின் சிறந்த பாஸ்ட் பவுலர் இவர்தான் – ஸ்டூவர்ட் பிராட் ஓபன் டாக்

Broad
- Advertisement -

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ராட் தன் தலைமுறையில் யார் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்று குறிப்பிட்டுள்ளார். கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கால்பந்,து கிரிக்கெட் போன்ற மக்கள் கூடும் விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் மே மாதம் முழுவதும் வரை எந்த ஒரு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தக்கூடாது என்று அந்த அரசாங்கம் தடை விதித்துள்ளது.

broad

- Advertisement -

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்தின் சீனியர் வீரர் ஸ்டூவர்ட் பிராட் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு வீட்டிலிருந்தபடியே பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.
இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விட்டு தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஆடி வருகிறார்.

இந்த பேட்டியில் அவரது தலைமுறையில் யார் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டூவர்ட் பிராட் : என் தலைமுறையில் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்றால் அது டேல் ஸ்டெய்ன்தான். உண்மையாக அடுத்த பந்துவீச்சை பார்த்து நான் மிகவும் ரசித்து இருக்கிறேன்.

broad 1

அவரது பௌலிங் ஆக்சன், வேகம், துல்லியம், பேலன்ஸ் என அனைத்துமே வியப்பாக இருக்கும். ஒரு பந்து வீச்சாளராக மாற வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக டேல் ஸ்டெயின் அவரை போல மாற வேண்டும் என்று நினைப்பேன். இவ்வாறு கூறியுள்ளார் ஸ்டூவர்ட் பிராட். தனது சமகால வீரர் ஒருவரை இவ்வாறு புகழ்ந்து பேசுவது கிரிக்கெட் வீரர்களை வீரர்களிடையே நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

steyn 1

தென் ஆப்பிரிக்க அணிக்காக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஸ்டெயின். சமீபகாலமாக அதிக காயங்கள் ஏற்பட்டு அவரால் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement