சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பல நிகழ்வுகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய ஒரே ஓவரில் இந்தியாவின் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்ததை மறக்க முடியாது. அப்போட்டியில் பேட்டிங் செய்ய வந்த யுவ்ராஜிடம் தொண்டையை கடித்து விடுவேன் என்று ஆண்ட்ரூ ஃபிளின்டான் வம்பிழுப்பார்.
அதற்கு பலிக் கிடாவாக அடுத்த ஓவரில் ப்ராடை அடித்து நொறுக்கிய யுவ்ராஜ் சர்வதேச டி20 உலகக்கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்தார். அத்துடன் 12 பந்தில் அரை வேகமான அரை சதமடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்த யுவ்ராஜ் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மறுபுறம் அடி வாங்கிய ப்ராட் கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்டது.
யுவ்ராஜிடம் வாங்கிய அடி:
இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் நாளடைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து பவுலராக சாதனை படைத்தார். இந்நிலையில் 2007இல் யுவ்ராஜிடம் வாங்கிய அடியே நாளடைவில் தம்முடைய கேரியர் சிறப்பாக காரணம் என்று ஸ்டூவர்ட் ப்ராட் பெருமிதம் தெரிவித்துள்ளார். அன்றைய நாளில் முறையாக தயாராகாததே 6 சிக்ஸர்கள் வழங்க காரணமானதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய யூடியூப் பேட்டியில் ப்ராட் பேசியது பின்வருமாறு. “அது நடந்திருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஆனால் அந்த வித்தியாசமான நிகழ்வு என்னை அறிவுபூர்வமாக உருவாக்கியது. கிரிக்கெட்டில் தோல்வியில் நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வது மோசமானது என்று உங்களுக்குத் தெரியும். அதை சொல்வதை நான் வெறுக்கிறேன். ஆனால் அன்றைய போட்டியில் நாங்கள் ஏற்கனவே உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியிருந்தோம்”
கேரியர் உருவாக காரணம்:
“அதனால் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் நடைபெற்ற அப்போட்டியை திரும்பிப் பார்க்கையில் என்னுடைய தயாராகும் முறை மிகவும் மோசமாக இருந்தது. என்ன பந்தை எங்கே வீசிய போகிறேன்? என்ற தெளிவு என்னிடம் இல்லாமல் இருந்தது. எனக்கு நானே ஒரு சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான சரியான இடைவெளியில் இல்லாமல் இருந்தேன். அந்த சமயத்தில் 7 – 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை”
இதையும் படிங்க: நியூசிலாந்து ஒருநாள் தொடரில் அந்த 2 பேருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பே கிடைக்காது – ஆகாஷ் சோப்ரா கருத்து
“கொஞ்சம் நீளமான பொன்னிற முடிகளுடன் விளையாடிய என் முகத்தில் யுவ்ராஜ் கடினமாக அடித்தார். அப்படித்தான் விளையாட்டின் போக்கு செல்லும் என்று நான் நினைக்கிறேன். கேரியரை நன்றாக துவங்கிய உங்களுக்கு 26 – 27 வயதில் அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் விளையாட்டை அர்ப்பணிப்புடன் விளையாடுவதை நிறுத்தி விடுவீர்கள். உங்களுடைய உறுதி சரியக்கூடும். பின்னர் 31 வயதில் நீங்கள் கம்பேக் கொடுத்து அடுத்த 5 வருடங்கள் முதலாளியாக விளையாடலாம்” என்று கூறினார்.



