அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 2 பேருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது : ஆகாஷ் சோப்ரா
அதேபோன்று இவ்விரு தொடர்களுக்குமான இந்திய அணியும் தனித்தனியே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி வடோதரா நகரில் துவங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மொத்தம் 15 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு இந்த தொடரில் விளையாடும் வாய்ப்பே கிடைக்காது என்று சில பேச்சுக்களும் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பில்லை என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வந்துள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதேபோன்று கேப்டன் சுப்மன் கில் அணிக்குள் வந்துள்ளதால் திலக் வர்மாவும் வெளியேறியுள்ளார். இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரின் போது பேக்கப் விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ள ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் கே.எல் ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடவுள்ள நிலையில் அவர்தான் முதல் தேர்வாக இருப்பார். அவரை தாண்டி ரிஷப் பண்ட்க்கு இடம் கிடைக்காது. அதேபோன்று மற்றொரு வீரரான நிதீஷ்குமார் ரெட்டிக்கும் இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : இன்னும் 138 ரன்கள் தேவை.. ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்த காத்திருக்கும் சாதனை – விவரம் இதோ
ஏனெனில் பாண்டியாவிற்கு பதிலாக அவர் அணியில் இருந்தாலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக அவரை விளையாட வைக்க இந்திய அணி தயக்கம் காட்டும். அவரால் ஹார்டிக் பாண்டியாவின் இடத்தை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடியுமா? என்பதும் சந்தேகம் தான். எனவே இவருக்கும் வாய்ப்பு இருக்காது என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



