இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்த வேளையில் அந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து 37 வயதாகும் அவர் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக முக்கிய இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
ரவீந்திர ஜடேஜா நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :
அந்த வகையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் ஜடேஜா இடம் பிடித்து விளையாட இருக்கிறார். எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில் இந்த நியூசிலாந்து தொடர் அவரது ஒருநாள் கரியருக்கு மிக முக்கியமான தொடராகவும் மாறியுள்ளது. ஏனெனில் இளம் வீரர்கள் பலர் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் அனுபவ வீரரான இவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய ஒருநாள் அணியில் அவரால் நீடிக்க முடியும்.
அந்த அளவிற்கு இந்திய அணியில் வீரர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் ரவீந்திர ஜடேஜா மேலும் 138 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அந்தவகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 207 போட்டிகளில் விளையாடி 232 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு பேட்டிங்கிலும் 13 அரை சதங்களுடன் 2862 ரன்களை அடித்துள்ளார்.
இதையும் படிங்க : இன்னும் 94 ரன்கள் மட்டுமே தேவை.. சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – விராட் கோலி
இதன் காரணமாக மேலும் அவர் இந்த நியூசிலாந்து ஒருநாள் தொடரில் 138 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களையும், 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



