இந்தியாவின் சுந்தர் தன்னம்பிக்கை காமெடி பண்ணி.. கடைசில பல்ப் வாங்குனதை நெனச்சு சிரிச்சேன்.. ப்ராட் கிண்டல்

Stuart Broad
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அத்தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடும் இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 336/6 ரன்கள் குவித்துள்ளது. கடைசி நாளில் 4 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள அந்த அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

அதனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு பிரகாச வாய்ப்புகள் இருக்கிறது. அதன் காரணமாக இங்கிலாந்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள். இதற்கிடையே ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்தத் தொடரில் உங்களால் மறக்க முடியாத தருணம் எது? என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட்டிடம் கேட்கப்பட்டது.

- Advertisement -

நம்பிக்கை கூறிய சுந்தரை:

அதற்கு இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் காமெடி செய்து கடைசியில் பல்ப் வாங்கியதை நினைத்து சிரித்ததை மறக்க முடியாது என ப்ராட் கூறினார். அதாவது 3வது போட்டியில் வெற்றி பெறுவதற்கு 193 ரன்களை துரத்திய இந்தியா 4வது நாள் முடிவில் 58/4 என்று தடுமாறியது. அப்போது கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு “நிச்சயமாக, உணவு இடைவெளிக்கு பின் இந்தியா வெல்லும்” என்று வாசிங்டன் சுந்தர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த நாள் ஆட்டத்தில் மிகவும் போராடிய இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தியா வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்த வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

கிண்டல் செய்த ப்ராட்:

அந்த தருணத்தைப் பற்றி தற்போது ப்ராட் கிண்டலாக பேசியுள்ளது பின்வருமாறு. “இந்தத் தொடரில் எனக்கு மிகவும் பிடித்த தருணம் என்னவெனில், பேட்டிங் செய்வதற்கு முன்பாக இந்தியா கண்டிப்பாக இந்தப் போட்டியை வெல்லும் என்று வாஷிங்டன் சுந்தர் பேட்டியில் தெரிவித்தார். அடுத்த நாளில் ஜோப்ரா ஆர்ச்சர் வேகப் பந்தை வாஷிங்டன் சுந்தர் அடித்தார்”

இதையும் படிங்க: நான் விளையாடுறேனோ.. இல்லையோ.. டீம் தான் பர்ஸ்ட் எனக்கு முக்கியம் – பூரிக்க வைத்த துருவ் ஜூரேல்

“அதை ஆர்ச்சர் அழகாக கேட்ச் பிடித்தார். சுந்தர் 0 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அது என்னை சிரிக்க வைத்தது” என்று கூறினார். அதே போல மற்றொரு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் 3வது போட்டியில் சுப்மன் கில் – ஜாக் கிராவ்லி ஆகியோர் மோதியது தமக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement