நான் விளையாடுறேனோ.. இல்லையோ.. டீம் தான் பர்ஸ்ட் எனக்கு முக்கியம் – பூரிக்க வைத்த துருவ் ஜூரேல்

Dhruv Jurel
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ள துருவ் ஜுரேல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக முதன்மை விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

எனக்கு டீம் தான் முக்கியம் : பூரிக்க வைத்த துருவ் ஜுரேல்

ஏற்கனவே இந்த தொடரில் ரிஷப் பண்ட் அவ்வப்போது காயம் காரணமாக அவதிப்படும்போது மாற்று விக்கெட் கீப்பராக களத்திற்கு வந்து சுயநலமற்ற பங்களிப்பை வழங்கியிருந்த அவருக்கு இந்த ஐந்தாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மிகச் சிறப்பாக செயல்படும் அவர் இனிவரும் காலங்களிலும் இந்திய அணியுடன் தொடர்ந்து பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் இடம் பிடித்து விளையாடி வருவது குறித்து பேசிய துருவ் ஜுரேல் கூறுகையில் : என்னை பொறுத்தவரை பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கிறதோ, இல்லையோ இந்திய அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியம். ஏனெனில் ஒரு அணியின் வீரராக நாம் விளையாடுகிறோமோ, இல்லையோ அணி வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே விரும்புவோம்.

அந்த வகையில் நான் என்னுடைய பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே விளையாடி வருகிறேன். என்னுடைய சிறு வயதிலிருந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு போட்டியிலாவது விளையாடி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடரில் நான் அங்கு விளையாடியது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய அனுபவம். வெளிநாட்டு மைதானங்களில் விளையாடுவது என்பது எப்போதுமே சவாலான ஒன்று. அந்த வகையில் இந்த தொடரில் நான் இங்கு விளையாடி வருவது ஒரு ஸ்பெஷலான அனுபவம் தான்.

இதையும் படிங்க : இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியை தாண்டி கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை – பேட்டிங்கில் இல்ல

இந்திய அணியில் ரிஷப் பண்ட் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது துரதிஷ்டவசமானது. இந்திய அணியின் சீனியர் வீரரான அவர் எப்பொழுதுமே மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கக் கூடியவர். அவரது இடத்தில் நான் விளையாடும் போது கூடுதல் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் துருவ் ஜுரேல் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement