ஏற்கனவே அவங்க இருக்குற நிலைமைல இதுவேறயா ? – இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட சிக்கல்

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்கி 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு கடைசி நாளில் 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 9 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. ஆனால் கடைசி நாள் முழுவதும் மழை பெய்ததன் காரணமாக இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிவடைந்தது.

Rain

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நாளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஸ்டூவர்ட் பிராட் இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியின்போது முதல் இன்னிங்சில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய பிராட் இரண்டாவது இன்னிங்சில் போது 5 ஓவர்கள் மட்டுமே வீசினார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்னதாக இவருக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

Broad

இதன் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டோக்ஸ் ஓய்வில் உள்ளார். அதேபோன்று போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஆர்ச்சர், வோக்ஸ் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.

Broad

இந்நிலையில் பிராடுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றமாக ஆல்ரவுண்டர் மொயின் அலி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement