தப்பு செய்த ஸ்டூவர்ட் பிராட். அப்பாவாக இருந்தும் அவரது தவறுக்காக நடுவராக தண்டனை அளித்த க்றிஸ் பிராட் – விவரம் இதோ

Chris-Broad
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு மத்தியில் இந்த தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Naseem

- Advertisement -

இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஐசிசி விதிமுறைகளை மீறியதாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யாஷிர் ஷாவின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் ஸ்டூவர்ட் பிராட் அவரை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக அவர் மீது புகார் அளிக் கப்பட்டது.

இந்த புகார் குறித்து களத்தில் இருந்த நடுவர் கிறிஸ் பிராட் விசாரித்தார். இவர் ஸ்டூவர்ட் பிராடின் தந்தை. அவர் தந்தையாக இருப்பினும் போட்டியின் நடுவர் என்பதால் அவர் முன் ஆஜரான பிராட் தனது தவறை ஒப்புக்கொண்டார். மேலும் தான் இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்பது மட்டுமின்றி அபராத தொகையையும் செலுத்துவதாக தெரிவித்தார்.

Broad

இதனை அடுத்து அவருடைய போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அவருக்கு அபராதமாக விதித்தார் நடுவரும், அவருடைய தந்தையும் க்றிஸ் பிராட். மேலும் இந்த செயலின் மூலம் அவர் ஒரு தகுதி இழப்பு புளியையும் பெற்றுள்ளார். கடந்த 24 மாதங்களில் இது போல மூன்றாவது முறையாக தண்டனை பெற்று மொத்தம் 3 புள்ளிகளுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chris broad 1

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து நாட்டில் உள்நாட்டு நடுவர்களே பணியாற்றி வருகின்றனர். வெளிநாட்டு நடுவர்கள் யாரும் இது தொடர்பில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement