டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்டுவர்ட் பிராட் – விவரம் இதோ

Broad
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஜோடியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஜோடி திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் பல ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த ஜோடி உலக கிரிக்கெட் பேட்ஸ்மேன் மிரட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Broad

- Advertisement -

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெளியில் உட்கார வைக்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராடை ஆதரித்து ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்தது. மேலும் அவரை சேர்க்காததால் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்ட பிராட் தனது அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இவரின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பென் ஸ்டோக்ஸ் இன் அட்டகாசமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

broad

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் பிராத்வொயிட்டை ஆட்டமிழக்க வைத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

broad

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு முன்னர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 129 டெஸ்ட் போட்டிகளில் ஜேம்ஸ் அன்டர்சன் 500 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 140 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement