இனிவரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்பது சாத்தியமில்லை – ஸ்டுவர்ட் பிராட் ஓபன் டாக்

Broad

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரிய பாதிப்பிற்கு பின்னர் சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

broad

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிராட் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் அவர் சேர்க்கப்பட்டார். தன்னை சேர்த்தற்கான சரியான பலனைத் தந்த பிராட் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசினார்.

அதாவது இந்த தொடரில் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்ற உலக சாதனையையும், இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் புகழ்ந்து பேசி வரும் இவ்வேளையில் தனது 500 விக்கெட்டுகள் சாதனை குறித்து பேசிய கூறியதாவது :

broad

இனிவரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்துவது என்பது எளிதானது கிடையாது. ஏனெனில் அப்படி வீழ்த்த வேண்டும் என்றால் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே வீழ்த்த முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைப்பது அரிது ஏனெனில் 20 போட்டிகளுக்கான முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்பட்டு வருவதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் என்பது இனி சாத்தியம் கிடையாது என்றே எனக்கு தோன்றுகிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்காக விளையாடி அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன் அதுவும் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடிந்ததை எண்ணி பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

broad 1

2016 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் மேலும் தொடர்ந்து சில காலங்கள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.