இப்போ நெனச்சாலும் புல்லரிக்குது. என் வாழ்வில் மறக்கமுடியாத போட்டி இதுதான் – மனம்திறந்த ஸ்டுவர்ட் பின்னி

Binny

இந்திய அணியின் வெற்றிகரமான முன்னாள் வீரர்களில் ஒருவர் ரோஜர் பின்னி. அவரின் மகன் தான் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி. ரோஜர் பின்னி 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஆடியவர். ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரரான அவர் அவரது வாரிசான ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி கிரிக்கெட்டில் நீண்டகாலம் நீடிக்கவில்லை.

Binny 1

ஆம் இந்திய அணியில் சிறிதுகாலம் விளையாடிய அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. இந்திய அணிக்காக வெறும் 6 டெஸ்ட் போட்டி மற்றும் 14 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள ஸ்டூவர்ட் பின்னி அந்தக் குறுகிய காலத்திலேயே ஒரு மிகப்பெரிய உலக சாதனையை படைத்து விட்டுத்தான் சென்றார்.

அதாவது 2014 ஆம் ஆண்டு வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்டூவர்ட் பின்னி அந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெறும் 4.4 ஓவர்கள் வீசி 4 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார சாதனை படைத்தார்.

Binny 3

அவரின் இந்த அருமையான பௌலிங்கால் 58 ரன்களுக்கு வங்கதேச அணி சுருண்டு ஆல் அவுட் ஆனது. முதலில் பேட்டிங் பிடித்த இந்திய அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்த போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த நிகழ்வு குறித்து தற்போது ஆங்கில ஸ்போர்ட்ஸ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த வீடியோவினை இப்போது பார்த்தால் கூட எனக்கு மெய்சிலிர்க்கிறது. எனது கிரிக்கெட் வாழ்வில் அதை விட மிகச் சிறந்த தருணம் எதுவும் இருக்க முடியாது. அந்த போட்டியில் நாங்கள் குறைந்த ரன்கள் அடித்து இருந்ததால் போட்டியின் இரண்டாவது பாதியில் அழுத்தம் இருந்தது. ஆனால் அதன் பின்னர் சற்று மழை பெய்து விலகவே என்னுடைய மித வேகப்பந்து வீச்சுக்கு அது ஒத்துழைத்தது.

Binny 2

அந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தேன் என்று ஸ்டூவர்ட் பின்னி தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த ரன்களை கொடுத்த பவுலர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் வால்ஷ் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஸ்டூவர்ட் பின்னி தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.