முழு நிர்வாணமாக மைதானத்தில் ஓடிவந்து பல்டி அடித்த ரசிகர் – வைரல் வீடியோ

Nude-fan
- Advertisement -

நேற்றுமுன்தினம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலகக் கோப்பை லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

nude fan 1

- Advertisement -

தற்போது இந்த போட்டியில் நடந்த சுவாரசியமான விடயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது யாதெனில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஆட்டத்தின் நடுவே ரசிகர் ஒருவர் முழு நிர்வாணமாக மைதானத்துக்குள் ஓடிவந்தார்.

மேலும் அவர் பல்டி அடித்து தனது சேட்டையை செயல்கள் மூலம் கவனத்தை ஈர்த்தார். பிறகு சிறிது நேரத்தில் மைதான காப்பாளர்கள் உள்ளே வந்து அவரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.

இறுதியில் ஒருவழியாக அவரை பிடித்து மைதானத்தில் இருந்து காப்பாளர்கள் வெளியேற்றினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement