நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணியின் துவக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ அடுத்து ஸ்டோனிஸ் களமிறங்கினார். அப்போது 13 ஆவது ஓவரை வீச வந்த ஆர்ச்சர். அவரது பந்துவீச்சில் ஸ்டோனிஸ் வானுயரத்தில் ஒரு மிகப்பெரிய சிக்ஸரை அடித்தார். அந்த சிக்ஸரை பார்த்த கோலி எழுந்து நின்று கைதட்டி அவரை ஆரவாரப்படுத்தினார். இதோ அந்த வீடியோ :
Stoinis hits, Virat cheers https://t.co/xjDE1dvKt6 via @ipl
— Siva.k (@sivakubendiran) April 3, 2019
ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 67 ரன்களை குவித்தார்.
பிறகு 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை அடித்து இலக்கினை அடைந்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் முதல் வெற்றியை அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான ஷ்ரேயாஸ் கோபால் 4-1-12-3 ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.



