பாஸ்தா சாப்பிட்டால் மந்தம். சிக்கன் சாப்பிட்டால் அதிரடி. விமர்சையாக பதிலளித்த – ஸ்டோக்ஸ்

Stokes
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவு பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் கடைசி விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை வெற்றி பெறச்செய்தனர்.

Marnus 1

- Advertisement -

இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமைந்தது. இந்த போட்டியில் நாயகனான பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இறுதிவரை நின்று உலகக்கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். அதனைப் போன்றே தனியொருவராக நின்று இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

போட்டி முடிந்து பேட்டி ஒன்றை அளித்த ஸ்டோக்ஸ் நிருபர் ஒருவர் இந்த போட்டியில் நீங்கள் திடீரென்று அதிரடியாக மாறி சிக்சர்களை அடித்து தள்ள காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்டோக்ஸ் : வெற்றிபெற்ற நாளுக்கு முந்தைய நாள் பாஸ்தா சாப்பிட்டேன் அதனால் மந்தமாக விளையாடினேன்.

Stokes

ஆனால் இறுதிநாளின் முன்னர் இரவு நாக் அவுட் சிக்கன் சாப்பிட்டேன் மேலும் இரண்டு சாக்லேட்டுகளை சாப்பிட்டேன். அவைகளே என்னை அதிரடியாக ஆட செய்தது என்று நகைச்சுவையாக பதிலளித்தார். அவரின் இந்த விமர்சையான நகைச்சுவையான பதிலை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

Advertisement