இழப்பதற்கு எதுவும் இல்லை. எனது அதிரடிக்கு காரணம் இதுதான். எங்களுக்கு இன்னும் சின்ன சேன்ஸ் இருக்கு – ஸ்டோக்ஸ் ஓபன் டாக்

Stokes-2

ஐபிஎல் தொடரில் 50 வது லீக் போட்டியில் நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே. எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

KXIPvsRR

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 63 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சர் என 99 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் 46 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி

17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர். இறுதி நேரத்தில் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 31 ரன்களையும், பட்லர் ஆட்டமிழக்காமல் 22 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Smith

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது : நாங்கள் இதுபோன்ற நிலையில் இருக்கும் பொழுது இந்த தொடரில் இழக்க எதுவும் இல்லை. நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் சிறிதளவு வாய்ப்பே உள்ளன. தற்போதும் ஒரு ஊஞ்சலாடும் நிலையிலேயே உள்ளோம். எனவே இந்த போட்டியில் அதிரடியாக விளையாட முடிவு செய்தேன். கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக நான் என்ன செய்தானோ அதையே இந்த போட்டியிலும் செய்ய விரும்பினேன்.

- Advertisement -

Stokes

அதன்படி புதிய பந்தை அடித்து நொறுக்க திட்டமிட்டு மிகவிரைவாக ரன்களை சேர்த்தேன். கடந்த போட்டிக்கும் இந்த போட்டிக்கும் சரியான இடைவெளி இருந்ததால் பயிற்சியும் சிறப்பாக இருந்தது. அதனால் நான் ஒரு பந்தையும் அடிக்கவே முயற்சித்தேன். இந்த இரண்டு போட்டிகளும் எனக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்துள்ளன. மேலும் இந்த போட்டியில் வெற்றி மூலம் சரியான நேரத்தில் எங்களுக்கு ஒரு திருப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்வோம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.