RR vs CSK : ஜான்டி ரோட்ஸ் போல அபாரமாக டைவ் கேட்ச் பிடித்த ராஜஸ்தான் வீரர் – வீடியோ

ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான போட்டியில் இரண்டாவதாக ஆடிய சென்னை அணி வீரரான ஜாதவ் 1 ரன்னில் இருக்கும்போது ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜாதவ் அடித்த பந்தினை

Stokes
- Advertisement -

ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான போட்டியில் இரண்டாவதாக ஆடிய சென்னை அணி வீரரான ஜாதவ் 1 ரன்னில் இருக்கும்போது ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜாதவ் அடித்த பந்தினை பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ஸ்டோக்ஸ் காற்றில் பறந்து சிறப்பாக கேட்ச் செய்து அசத்தினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களை குவித்தார். பட்லர் 23 ரன்களை குவித்தார்.

பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தோனி 58 ரன்கள் குவித்தார். ராயுடு 57 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement