Ben Stokes : இவர்கள் இருவரது பேட்டிங் ஸ்டைலுக்கு நான் ரசிகன் – ஸ்டோக்ஸ் பேட்டி

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Stokes
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. நாளை இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் தனது விருப்பமான வீரர்களின் பேட்டிங் ஸ்டைல் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : எனக்கு இந்தியாவின் கேப்டன் விராத் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது பேட்டிங் ஸ்டைல் மிகவும் பிடிக்கும்.

smith

ஏனென்றால் அவர்கள் ஆட்டத்தின் போக்கு எவ்வாறு அமைகிறதோ அதற்கு ஏற்றவாறு பேட்டிங்கை மேற்கொள்பவர்கள் மேலும் அடிக்க வேண்டிய பந்தை அடிக்கும் தடுக்க வேண்டிய பந்தை தடுத்து நிதானமாக ஆடும் அவர்களால் பெரிய ரன்களை குவிக்க முடிகிறது. அதனைப் போன்று நானும் இங்கிலாந்து அணிக்காக தேவையானபோது அதிரடியாகவும், இக்கட்டான நிலையில் சுதாரித்து ஆடவும் உள்ளேன் என்று உலக கோப்பை தொடர் குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

Advertisement