ஐ.பி.எல் தொடர் தான் இப்போ ரொம்ப முக்கியமா ? ஸ்டோக்ஸ்ஸை சாடிய ரசிகர் – நிதானமான பதில் அளித்த ஸ்டோக்ஸ்

Stokes-2

இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்த மிகப்பெரிய கிரிக்கெட் தொடரை விளையாடி முடித்து உள்ளது. இதனை அடுத்து 9ஆம் தேதியை துவங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக இங்கிலாந்து வீரர்கள் சிலர் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். மீதமுள்ள வீரர்கள் இங்கிலாந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார் ஸ்டோக்ஸ்.

stokes

இதனால் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வீரர்கள் இந்தியாவிலேயே தங்கி பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவரைப்போலவே இங்கிலாந்து அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரில் விளையாட இங்கேயே தங்கி விட்டனர். மேலும் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசி உள்ள ஸ்டோக்ஸ் கூறுகையில் :

ஐபிஎல் தொடர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி உள்ளத்தில் மகிழ்ச்சி. ரசிகர்கள் தான் இந்த தொடரின் உயிர்நாடி. மைதானம் முழுவதும் நிரம்பி இருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது ஒரு அற்புதமான அனுபவம். இம்முறை ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்களா ? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

stokes 1

இருப்பினும் ரசிகர்கள் முழுவதும் மைதானத்தில் அமர்ந்திருக்க அதனிடையே விளையாடுவது தனி சுகம். சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு இடையேயான தொடரில் இந்த அனுபவத்தை ரசித்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் வலைதளத்தில் ஸ்டோக்ஸ் இடம் தற்போது “பணத்தை தேடி சென்றிருக்கும் நீங்கள் இங்கிலாந்து அணி திரும்பியதும் பந்து வீச அசதியாக இருக்கிறது” என சொல்வீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

இதற்கு பொறுமையுடன் பதிலளித்த ஸ்டோக்ஸ் “நான் எப்போதாவது இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது பந்து வீசி அசதியாக இருக்கிறது என சொல்லி உள்ளேனா ?” என்று அந்த ரசிகரின் கேள்விக்கு பொறுமையாக பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.