4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் வந்தா எல்லாம் வேஸ்டா போய்டும். இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது – பென் ஸ்டோக்ஸ் வேண்டுகோள்

Stokes
- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் வருகைக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் மவுசு வெகுவாகக் குறைந்தது. ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் ஆடப்பட்டது. அதற்கு பின்னர் 40 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் கிரிக்கெட் கொண்டுவரப்பட்டது. அப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பெரிதாக சேதம் ஏற்படவில்லை.

stokes

- Advertisement -

பின்னர் 2004 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்போதே டெஸ்ட் கிரிக்கெட் அணி தனது சரிவை சந்திக்க ஆரம்பித்தது. மக்கள் 5 நாட்கள் ஒரு இடத்தில் தங்கி இருந்து டெஸ்ட் கிரிக்கெட் பார்க்க விரும்பவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் நான்கு நாட்களாக ஐசிசி முடிவு செய்துள்ளது. இது குறித்து பல வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐசிசியின் இந்த முடிவை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்தான் எப்போதும் உயர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து கொண்டு வருவதாக பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கிறது.ஆனால் இது எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை.

Stokes

நீங்கள் பல வீரர்களை கேட்டு இருக்கலாம், ஆனால் விராட் கோலி, ஜோ ரூட் ஆகியோரிடம் கேட்டால் டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு சிறப்பானது என்று அவர்கள் கூறுவார்கள். என்னை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் எப்போதும் தூய்மையான வடிவம். தற்போது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

ஆகையால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டு வந்தால் அது ஈஸி கிரிக்கெட் என்று அழைக்கலாம் என்று கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 நாட்கள் என்பதனை 4 நாட்கள் என்று குறைக்க யோசனை ஆரம்பித்த போதே பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த முடிவினை எதிர்த்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற வீரர்கள் என்பதனால் ஐ .சி.சி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

Stokes

ஆனால் தற்போது ஸ்டோக்ஸ் அளித்துள்ள இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது கருத்திற்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருவதால் இந்த விடயம் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement