இதைவிட வேறென்ன எனக்கு வேண்டும். என் வாழ்நாள் பலனை அடைந்து விட்டேன் – ஸ்டோக்ஸ் பெருமிதம்

Stokes
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சர்வதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. இந்நிலையில் அதனை போக்கும் விதமாக தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

wivseng

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 8-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னர் இங்கிலாந்து வந்தடைந்து பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு தற்போது போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இடம்பெற மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

ஏனெனில் ஜோ ரூட்டின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதால் அவர் அவரது மனைவியுடன் நேரத்தை செலவிடுவதற்கு இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது புதிய கேப்டனாக அந்த அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

Stokes

இந்நிலையில்தான் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ் இதுகுறித்துக் கூறுகையில் : நான் இன்னும் கேப்டன் மனநிலைக்கு தயாராகவில்லை. இது சாதாரணமான விடயம் கிடையாது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் என்பது மிகப்பெரிய கவுரவம். அதை ஒரே ஒரு தடவை கேப்டனாக இருந்தாலும் கூட வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாறும்.

- Advertisement -

எனவே நான் இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த வாய்ப்பை சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை இங்கிலாந்துக்கு பெருமை தரக் கூடியதாக மாற்றுவேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் ஜோ ரூட் சென்ற வழியில்தான் நானும் பயணிக்க போகிறேன் என்றும் அவரது வழியில் அணியை சிறப்பாக வழி நடத்துவேன் என்றும் பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

Stokes-1

வெற்றி எப்போதும் எங்களது மனதில் இருக்கும் அதற்கேற்றார் போல் திட்டமிட்டு விளையாடுவோம் என்றும் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement