IND vs ENG : இந்தியா எங்களிடம் ஒன்றுமே கிடையாது. எளிதாக வீழ்த்துவோம். சவால் விட்ட – இங்கிலாந்து வீரர்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Shankar
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

india

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. நாளை நடைபெற உள்ள போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நாளைய போட்டிக்கு அடுத்து 30ஆம் தேதி இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியுடனான போட்டி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்தியாவை எங்களால் எளிதில் வீழ்த்த முடியும். நாங்கள் பலமுறை இந்திய அணியை எளிதாக வீழ்த்தியுள்ளோம். அதிலும் இங்கிலாந்து மண்ணில் நாங்கள் தான் வலுவான அணி இந்தியர்களை இங்கிலாந்து மண்ணில் எப்படி நிறுத்த வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

stokes

இந்திய வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். இருந்த போதிலும் அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து அவர்களுக்கு எதிரான போட்டியை நாங்கள் வெல்வோம் மேலும் அடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமின்றி உலக கோப்பை நாங்களே கைப்பற்றுவோம் என்றும் பென் ஸ்டோக்ஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement