எனக்கு ஓவர் த்ரோ ரன்கள் வேண்டாம். முறையிட்ட ஸ்டோக்ஸ் மறுத்த அம்பயர் – காரணம் இதுதான்

Stokes

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஓவர் த்ரோ சர்ச்சை இன்னும் முடிவடைந்த பாடில்லை. இந்நிலையில் அந்த ஓவர் த்ரோ குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது மேலும் ஒரு தகவல் இந்த ஓவர்த்ரோ குறித்து வெளியாகியுள்ளது.

stokes

போட்டியின் போது கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க ஸ்டோக்ஸ் வேகமாக ஓடிய போது பந்து பேட்டில் பட்டு தவறுதலாக பவுண்டரி சென்றது. இதனால் இங்கிலாந்து அணி டிரா செய்ய அந்த ஓவர் த்ரோ பெருமளவில் உதவியது. மேலும் அதற்கடுத்து சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் கடைசி ஓவரில் ஓவர் த்ரோ ரன்கள் தனக்கு வேண்டாம் என்று ஸ்டோக்ஸ் நடுவரிடம் கூறியதாக தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆண்டர்சன் கூறியுள்ளார். மேலும் ஓவர் த்ரோ பந்து தவறுதலாக பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது. அப்போது ஸ்டோக்ஸ் அம்பயரிடம் சென்று 4 ரன்கள் வேண்டாம் என்று அவரிடம் கூறியதாகவும் இருப்பினும் அவர் போட்டியின் விதிமுறைகளுக்கு ஏற்ப கணித்து 6 ரன்களை வழங்கியதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

Stokes 2

போட்டிகள் முடிந்து பரிசளிப்பு விழாவின் போது கேன் வில்லியம்சன் இடம் இது குறித்து ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருந்தார். மேலும் பிரபல அம்பயரான சைமன் டபல் அந்த ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியிருக்கக் கூடாது 5 ரன்கள் தான் வழங்கி இருக்க வேண்டும் என்றும் மேலும் ஸ்டோக்ஸ் அடுத்த பந்து பேட்டிங் செய்திருக்கக்கூடாது ரஷித் தான் பேட்டிங் செய்து இருக்க வேண்டும் என்ற கருத்தினையும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.