சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக வைத்த ஸ்டோக்ஸ் – காரணம் இதுதான்

stokes
- Advertisement -

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கிவரும் பென் ஸ்டோக்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 1991 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பிறந்த பென் ஸ்டோக்ஸ் இளம்வயதிலேயே நியூசிலாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார். மேலும் இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் படிப்படியாக தனது கேரியரை தொடங்கி சர்வதேச அணியில் இடம் பெற்று 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

Stokes

- Advertisement -

இதுவரை 71 டெஸ்ட் போட்டிகள் 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ள ஸ்டோக்ஸ் கிட்டத்தட்ட 8000 ரன்களையும் ஏகப்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனது முப்பது வயதிலேயே திடீரென காலவரையற்ற ஓய்வு எடுக்கப் போவதாக கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியான தகவலில் பென் ஸ்டோக்ஸ் மன நலத்திற்கு முன்னுரிமை அளித்து இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை தாங்கள் எதிர்நோக்கி உள்ளதாகவும் நிர்வாக இயக்குனர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.

Stokes

மேலும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக கிரெய்க் ஓவர்டன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டாக்ஸ்ஸின் இந்த ஓய்வு முடிவை இங்கிலாந்து வாரியமும் ஏற்றுக் கொண்டுள்ளதால் அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக்கிங் செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இப்படி 30 வயதிலேயே இந்த முடிவினை எடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் மனநலன் கருதி அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதால் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement