இந்திய வீரர்கள் கரெக்ட்டா சொல்றாங்க. கிரிக்கெட் நடக்கணுனா இந்த ஒரே வழி மட்டும் தான் – ஸ்டோக்ஸ் அதிரடி

Stokes
- Advertisement -

கிட்டத்தட்ட உலகத்தில் கோரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. எந்த ஒரு நாடும் அதனை முற்றிலுமாக ஒழித்த பாடில்லை. இதன் காரணமாக கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற பெரும் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனாவிற்கு இடையில் இயல்பு வாழ்க்கை வாழ்வது பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது.

MI

- Advertisement -

கொரோனா கட்டுக்குள் வந்தபின்னர் போட்டிகளை துவங்கலாம் என்று அனைத்து நாடுகளும் பயணித்துக் கொண்டிருந்தன. ஆனால் இன்னும் ஒரு வருடத்திற்கு இதே நிலை நீடிக்கும் என்று தான் தெரிகிறது. மேலும் இந்தியாவில் கடந்த மாதம் துவங்க இருந்த 13 ஆவது ஐ.பி.எல் தொடர் இருமுறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் எப்படி இருந்தாலும் கால்பந்து தொடரில்னை நடத்தலாம் என ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தயாராகி வருகிறது. இதேபோன்று கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தி விடலாம் என்று பலரும் யோசனை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தற்போது பேசியுள்ள இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளதாவது..

stokes

கால்பந்து தொடர் போட்டி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். நாம் நாட்டிற்காக தன் விளையாடப் போகிறோம். அதனால ரசிகர்கள் முன் விளையாடினாலும் சரி இல்லையென்றாலும் சரி போட்டி இதன் அடிப்படையில் தான் நடைபெறும். இதன் காரணமாக ரசிகர்கள் இல்லாமலேயே போட்டிகளை நடத்தலாம் .அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்யத் துவங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Stokes

ஸ்டோக்ஸ் கூறிய அதே கருத்தினை ரஹானே, பாண்டியா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்பஜன் ஆகியோரும் இந்த யோசனையை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரசிகர்கள் இன்றி போட்டி நடந்தால் சுவாரசியம் இருக்காது என்பதனை ஆஸ்திரேலிய தொடரிலேயே நான் பார்த்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement