- Advertisement -
உலக கிரிக்கெட்

ரன் ஓடும்போது கவனிக்காமல் முரட்டு தனமாக முட்டிக்கொண்ட வீரர்கள். பாவம் பார்க்காமல் பழி வாங்கும் எதிரணி – வைரலாகும் வீடியோ

பல வருடங்களாக கிரிக்கெட்டில் போட்டிகளில் பல வகையிலான விசித்திரமான விக்கெட் வீழ்ச்சினை நம் கிரிக்கெட் போட்டிகளில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் வித்தியாசமான ஒரு ரன் அவுட்டிலிருந்து மெல்போர்ன் வீரர்களான ஸ்டாய்னிஸ் மற்றும் லார்கின் ஆகியோர் தப்பினார்கள்.

பிக்பாஸ் லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்களுக்கு இடையேயான போட்டியின் போது ஸ்டாய்னிஸ் மற்றும் லார்கின் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 14வது ஓவரில் திடீரென இரண்டு வீரர்களும் இரண்டாவது ரன் ஓடும்போது கவனிக்காமல் ஒரே திசையில் ஓடி படுபயங்கரமாக ஒருவர் மோதிக்கொண்டனர்.

இருப்பினும் சுதாரித்து மீண்டும் கிரீஸை ஓடிய ஸ்டாய்னிஸ் ரன்அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். வீரர்கள் மோதிக்கொண்டாலும் எதிரணி வீரர்கள் அதை சாதகமாக்கி ரன்அவுட் செய்யவே முயன்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் லார்கின் இந்த வாய்ப்பில் இருந்து தப்பி 49 பந்துகளில் 83 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by