கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு பிடித்த “ஆல்டைம் பேவரைட்” பேட்ஸ்மேன் இவர்தான் – ஸ்டெயின் புகழாரம்

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டெயின் அதன்பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

steyn 1

- Advertisement -

மேலும் தற்போது டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் அவர் உலக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். தென்ஆப்பிரிக்கா அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகள், 125 ஒருநாள் போட்டிகள் மற்றும் 47 டி20 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஆல்டைம் பெஸ்ட் பாஸ்ட்பவுலர்களில் ஒருவராகத் திகழும் ஸ்டெயின் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை டி20 தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியின் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றை அளித்த ஸ்டெயின் அவரது பேவரைட் கிரிக்கெட் யார் என்பது குறித்து தனது பதிலை தெரிவித்துள்ளார்.

Steyn-1

அதில் தனக்கு மிகவும் பிடித்த ஆல்டைம் கிரிக்கெட் வீரர் என்றால் அது தென் ஆப்பிரிக்க வீரரும் எனது மிகச்சிறந்த நண்பருமான டிவில்லியர்ஸ் தான் என்று தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்காக ஸ்டெயின் மற்றும் டிவில்லியர்ஸ் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக ஆடியவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணிக்காக இருவரும் இணைந்து ஆடுகின்றனர். 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியில் ஸ்டெயின் விளையாடியது குறிப்பிடத்தக்கது. மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை பறக்க விடும் திறமையான டிவில்லியர்ஸ் ரசிகர்களால் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படுபவர்.

ABD-1

தென் ஆப்பிரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இவரது பேட்டிங் ஸ்டைல்க்கு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் சாதித்த மற்றும் அதற்கு அனைத்து தகுதிகளும் உடைய டிவில்லியர்ஸை தனது ஆல்டைம் பேவரிட் கிரிக்கெட்டராக தேர்ந்தெடுத்ததில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.

Advertisement