Worldcup : இரண்டு தோல்விக்கு பின் தென்னாப்பிரிக்கா அணிக்கு இப்படி ஒரு சோதனை – விவரம் இதோ

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில்

Faf
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்யும்.

india

- Advertisement -

அதே போன்று தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் தொடரை ஆரம்பிக்க இந்திய அணி முயற்சி செய்யும். சவுதாம்ப்டனில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணியில் ஒரு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அந்த அணியின் பந்து வீச்சாளர்களின் காயம் மட்டுமே தற்போது மேலும் ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது. தற்போது அந்த அணிக்கு மற்றுமொரு விடயம் சிக்கலாக அமைந்துள்ளது.

Dale-Steyn

அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் காயம் காரணமாக தொடர் முழுவதிலுமிருந்து வெளியேறி உள்ளார் என்று அந்த அணியின் கேப்டன் டு பிளிசிஸ் கூறினார். மேலும் ஏற்கனவே நடந்த போட்டியின்போது லுங்கி நெகிடி காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி பகுதியை மட்டுமே நம்பி உள்ளதால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு இது ஒரு பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது

Advertisement