டிவில்லியர்ஸ்க்கு சமமான வீரர் மிஸ்டர் 360 வீரர் என்றால் அது இவர்தான் – ஸ்டெயின் புகழாரம்

Steyn

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தனது அதிரடி ஆட்டம் மூலம் உலக அளவில் பல ரசிகர்களை கொண்டுள்ளார். மேலும் அவர் ஆட்டத்தில் ஸ்பெஷல் என்னவென்றால் மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளும் ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளிக்கும்.

abd1

உலகின் பல முன்னணி பந்துவீச்சாளர்களை அனைத்து விதங்களிலும் சரமாரியாக அடித்து நொறுக்கும் டிவில்லியர்ஸுக்கு ரசிகர்களிடையே மிஸ்டர் 360 என்ற பெயரையம் அவரது அதிரடி ஆட்டம் பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் தற்போது மிஸ்டர் 360 வீரர் குறித்து ஸ்டெயின் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

டிவில்லியர்ஸ் மாதிரி ஒரு வீரர் இல்லை என்றால் நிச்சயம் மேக்ஸ்வெல் தான் கிரிக்கெட் உலகின் மிஸ்டர் 360 ஆக திகழ்ந்து இருப்பார். ஏனெனில் கிரிக்கெட்டை பொறுத்த மட்டிலும் தெளிவாகும், அபாரமாகவும் அடித்துவிடக்கூடிய வீரர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர். டிவில்லியர்ஸ் மட்டும் இல்லையென்றால் அவரது இடத்திற்கு மேக்ஸ்வெல் தான் சென்று இருப்பார்.

glenn-maxwell

மேலும் கடந்த 10 ஆண்டில் இவர் இல்லாத ஒரு டி20 அணி இல்லை என்பதே என்னுடைய கருத்து என்றும் ஸ்டெயின் கூறினார். மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணி மட்டுமின்றி ஐபிஎல் தொடர், பிக் பாஷ் மற்றும் உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் முக்கிய வீரராக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -