RCB vs CSK : துல்லியமான இன்ஸ்விங்கிங் யார்க்கர் மூலம் ரெய்னாவை க்ளீன் போல்ட் செய்த ஸ்டெயின் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

Raina-1
- Advertisement -

நேற்றைய சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பெங்களூரு 161 ரன்களை அடித்தது. பிறகு ஆடத்துவங்கிய சென்னை அணிக்கு எதிராக முதல் ஓவரை ஸ்டெயின் வீசினார். அந்த ஓவரில் ஏற்கனவே வாட்சன் அவுட் ஆக பிறகு இறங்கிய ரெய்னா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஸ்டெயினின் அபாரமான இன்ஸ்விங்கிங் யார்க்கர் மூலம் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

முதல் ஓவரிலேயே வாட்சன் மற்றும் ரெய்னா ஆகியோர் ஆட்டமிழக்க சென்னை அணி சரிவை சந்தித்தது. இந்த சரிவினை ஏற்படுத்தி பெங்களூரு அணி ஜெயிக்க முக்கிய காரணமாக ஸ்டெயின் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

- Advertisement -

VK and MS

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Steyn

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Advertisement