உலக கோப்பை தொடர் முடிந்து பல அணிகளின் வீரர்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஓய்வு முடிவை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இதுவரை தென் ஆப்பிரிக்கா அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 26 முறை 5 விக்கெட்டுகளையும், 10 விக்கெட்டுகளை 5 முறையும் வீழ்த்தியுள்ளார்.
உலக கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தாலும் காயம் காரணமாக மீண்டும் ஆரம்பத்திலே வெளியேறினார். இந்நிலையில் தான் அதிகம் விரும்பும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துள்ள ஸ்டெயின் அது குறித்து கூறியதாவது : டெஸ்ட் போட்டிதான் எனக்கு மிகவும் பிடிக்கும் உடல் மற்றும் மனரீதியாக இல்லாமல் சவால்களும் தரும் ஒரு விடயமாக டெஸ்ட் போட்டி இருக்கிறது.
ஆனால் அதிலிருந்து நான் ஓய்வு பெறுவது பயங்கரமானது தான் அதைக் காட்டிலும் இனிமேல் நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதில் கவனமாக உள்ளேன். எனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று இன்னும் சில காலம் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாட இருக்கிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.